மூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும்.




NPP - மக்கள் சக்திக்கு வாக்களிப்பதால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று வாதாடுகின்றவர்கள், ஏனைய பெரும்பாண்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்களால் பெற்றுக் கொண்ட சிறுபான்மையினருக்கான பாதுகாப்புக்கள் என்ன? என்ற வலுவான வினாவிற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பல சிவில் அமைப்புக்களே இன்று jvp ஐயும் இணைத்துக் கொண்டு நாட்டின் அத்தியவசிய அரசியல் தேர்ச்சியான மூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும்.

இலங்கையிலுள்ள சிறுபான்மையினராகிய நாம் அல்லது எமது வாக்குகள் கடந்த காலங்களில் ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆட்சிபீடமேற்றி வந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டம் ஆட்சிக்கு வந்த அல்லது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் சிறுபான்மையர்கள் சார்பான எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முறையான, முழுமையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்ததாக அறியப்படவில்லை மாறாக தேர்தல் கால கறிவேப்பிலையாகவே இந்த நாட்டின் சிறுபான்மையினர் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்ற உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் கசப்பாக இருந்தாலும் கூட.

UNP, SLFP, PP போன்ற அரசியல் கட்சிகளினதும், அக் கட்சிகளை வழிநடாத்துகின்றவர்களினதும் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் எமக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும் என்பது போல நன்கு பரீட்சையமானவர்களும் கூட. இதனால் இவர்கள் பசு தோல் போர்த்திய புலிகளாகவே சிறுபான்மை சமூகத்தில் நோக்கப்படுகிறார்கள் என்பது சிறுபான்மை சமூகத்தின் காப்பீடுகளை சீர்குலைத்துள்ளன என்பதானது கடந்த கால அரசியல் அனுபவமாகும்.

வளமையான வாக்களிப்புகளாகவே மக்களாகிய நாம் இம் முறையும் எமது வாக்குகளை பயன்படுத்துவோமாக இருந்தால் இந்த நாட்டின் அரசியலில் எவ்வித மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என்பது உறுதியாகும்.

"NPP - தேசிய மக்கள் சக்தி என்பதனை மூன்றாம் சக்தியாக நோக்க வேண்டுமே தவிர JVP என்பதற்குள் மாத்திரம் சுருக்கிவிட முடியாது."

[MLM - சுஹைல்]
மூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும். மூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும். Reviewed by Madawala News on August 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.