பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்..பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டினை மீளக்கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில் இனவாதத்தையும் மத வாதத்தையும் கிளறி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சில சக்திகள் முயற்சித்து வருவதாக கல்வியமைச்சரும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.  


மக்களை ஏமாற்றும் இனவாதத்தைத் தூவி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.  


தற்போதைய அரசாங்கம் நாட்டின் அதிகாரத்தை பாரமெடுத்த பின்னர் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.  


விவசாயம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன் பிடி, நீர்வளத்துறை அமைச்சர் பி. ஹரிசன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதற்கிணங்க, இம்முறை சிறுபோகத்தில் நெல்லை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு கிலோ நெல்லை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதன் பிரதிபலன்களை மக்கள் அனுபவிக்கவுள்ள வேளையில் சில சக்திகள் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.. Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5