இரத்தினபுரியில் வெள்ள அபாயம்.


இன்று 13.08.2019 இரத்தினபுரி பிரதேசத்தில் காலைமுதல் தொடர்ந்து
 காற்றுடன் கூடிய கடும் மழை பெய்த வண்ணம் 

காணப்படுகிறது. இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் இரத்தினபுரியில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புள்ளதாக வலிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இரத்தினபுரியில் களுகங்கை பெறுக்கெடுப்பதன் மூலமே இவ்வாறு வெள்ளப்பெறுக்கு ஏற்படுகின்றது. தற்போது களுகங்கை மட்டம் இருக்கும் அளவைவிட மிக உயர்வாக காணப்படுவதுடன் இரத்தினபுரி அமைக்கப்பட்டுள்ள வெள்ள அனர்த்த எச்சரிக்கை கருவியும் செயற்பட ஆரம்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.


 

தற்பொது இரத்தினபுரியில் இருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்படவுள்ள அனைவரும் தங்கள் பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களுக்கு அப்புரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.ஒவொருவருடமும்  வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவது வழமையான ஒன்றாக காணப்படுகிறது. 
கடந்த மாதம் 19.08.2019 அன்று சிறு வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டு மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். தற்போது அதேநிலை தோற்றம் பெற்றுள்ளது. 

அதேபோன்று பிரதான செய்திகளை பேசப்படாத இரத்தினபுரியில் உள்ள சில பிரதேசங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. இரத்தினபுரியில் கொடிகமுவ, பண்டரவத்த, படுகெதர, வரகதொட போன்றவற்றை குறிப்பிடலாம்.

இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வீடுகள் கிட்டத்தட்ட 10 000 காணப்படுகிறது. இவ்வெள்ளத்தால் பாதிக்கப்படும் மூவின மக்களும் இரத்தினபுரி ஜன்னத் ஜும்மா மஸ்ஜிதில் தங்கி இருப்பார்கள் என்பது குறிப்படத்தக்கது.

இதேபோன்று மக்கள் பாதிக்கப்படுவதை அரசியல் பிரமுகர்கள் அவதானிக்கின்ற போதும் இவர்களுக்கான தீர்வை பெற்று கொடுப்பதில்லை என்பது கவலை.

அனைவரும் இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

MMM Nussak 
Ratnapura 

இரத்தினபுரியில் வெள்ள அபாயம். இரத்தினபுரியில் வெள்ள அபாயம். Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.