உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்திற்குப் பின்னர் பெரும்பான்மை இன மக்கள் எம்முடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்..?


சமூக இயக்கச் செயற்பாட்டாளர் ஐ. ஐனுதீன் அவர்களின்  செவ்வி
நேர்காணல் இக்பால் அலி

சமகால பிரச்சினைகளின் போது சமூக நல்லிணக்கத்திற்காக கடுமையாக உழைத்தவர்களின்  பின்னணியில் நீங்களும் ஒருவராய் நின்றவர் என்ற வகையில் மாற்று மத சகோதரர்கள் இந்த இக்கெட்டான கால கட்டத்தில் எமது சமுதாயத்தின் மீது எத்தகைய அபிப்பிராயங்களை வைத்திருந்தார்கள் என்று கூறுவீர்களா?


முதலில் உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்திற்குப் பின்னர் எமக்;கு எதிராக சிங்கள ஊடகங்கள் விசத்தை கக்கத் தொடங்கின. அது கட்டுக் கடங்காமல் உண்மைக்குப் புறம்பான சோடிக்கப்பட்ட செய்திகளையே பரப்புரை செய்தன. அந்த செய்திகள் உண்மைத் தன்மை வாய்ந்ததோ  ஊடக தர்மத்தைப் பேணும் தன்மை வாயந்ததோ அதில் எந்தவிதமான கரிசனைத் தன்மையும் கவனத்தில் கொள்ளப்பட வில்லை. முஸ்லிம்கள் மீதான இனவன்முறையாளர்களின்  தாக்குதல்கள் முஸ்லிம்களுடைய  பெண்களுடைய நிகாப் , ஹிஜாப் முதல் வைத்தியர் சாபி வரையிலான பல பிரச்சினைகள் ஒன்றன் பின்; ஒன்றாய் தோன்றின.


இப்படி கடுமையான ஊடகங்களின் விசமத்தமான போக்கின் மூலம் முஸ்லிம்கள் நிலை குலைந்து போய் இருந்தனர். தோடரேச்சியாக ஊடகங்களால் முஸ்லிம்கள் மீது பூசுப்படும் சேற்றை சிங்கள மக்களும் ஓரளவு நம்பிக்கை கொள்ளுமளவுக்கு நாட்டினுடைய  சூழ்நிலை இருந்தது. சிங்கள முஸ்லிம் இரு  சமூகங்களுக்கிடையே பிளவுகளையும்  பிரிவினைகளையும் ஏற்படுத்துகின்ற வகையிலான பிரச்சாரங்களையே ஊடகங்கள் மேற்கொண்டன.


 எனினும் சிங்கள பெரும்பான்மையின மக்கள் இந்த விசமத் தனமான பிரச்சாரத்தையும் மீறி முஸ்லிம்கள் மீது வைத்துள்ள நல்லெண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படையாக வெளிப்படுத்த தொடங்கினார்கள் என்று கூறலாம்.


அப்படியானால்  குறித்த சம்பவங்களைக் குறிப்பிட முடியுமா?


கண்டி வைத்தியசாலையில் முதலில் நடந்த சம்பவம் ஒன்று கேள்விப்பட்டேன். கண்டி வைத்தியசாலைக்கு தாய் ஒருவர் ஹிஜாப் அணிந்து வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு கடமையில்  இருந்த காவலாளி ஒருவர் அந்த தாய் இடம் ஹிஜாப்பினை கழற்றி விட்டுவந்தால் மட்டும்   உள்ளே செல்ல முடியுமென அந்த தாயை தடுத்து நிறுத்தியுள்ளார்.  ஆனாலும் அந்த தாய் ஹிஜாப் அணிய முடியும். அதை அணிந்துதான் செல்வேன். அதை கழற்ற மாட்டேன் என்று அந்த காவலாளிவுடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் கண்டி பிரதான வைத்தியசலையின் அத்தியட்சகரான வைத்தியதிகாரி அந்தக் காவலாளியை அழைத்து கண்டித்ததுடன் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் தாய்மார்களுக்கு தடைகள் ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்திக் கூறியுள்ளார்.


இன்னுமொரு சம்பவம் குருநாகல் பிலஸ்ஸ என்ற இடத்தில் இடம்பெற்றது. இது நான் கேள்விப்பட்ட சம்பவம். பொசன் தின நிகழ்வை முன்னிட்டு பெரும்பான்மையின சிங்கள சகோதரர்கள் வீதியில் கொடி கட்டுவதற்காக எப்பொழுதும் இல்லாதவாறு இம்முறை அந்தப் பிரதேசவாசிகளை அழைத்துள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள ஒரு நபர் கொடிகட்டுவதற்காகச் சென்றுள்ளார்.    மது போதையில் மோட்டார் செலுத்தி வந்த பெரும்பான்மை யினத்தவர் ஒருவரால்  அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து கொடி கட்டிக் கொண்டிருந்த முஸ்லிமான அந்த நபர்  மோதுண்டு விபத்துக்குள்ளாகி விட்டார்.


பின்னர்  அந்த முஸ்லிம் நபரை  குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிசிக்சைக்காக அனுமதித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்துத் தொடர்பாக அங்கு கடமையில் இருந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரி என்ன நடந்தது என வினவினார். அங்கு  வருகை தந்திருந்த குழுவினர் நடந்த சம்பவத்தைக் கூறினார்கள்.
அப்போது அந்த வைத்திய அதிகாரி பின்வருமாறு கூறியுள்ளார்.


'எல்லாவற்றும் தண்டனை இருக்கிறது. இறை நியதி இருக்கிறது. யாராக இருந்தாலும் காலம் கடந்தாவது அதற்குரிய தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும்' என அந்த வைத்திய அதிகாரி அங்கு கூறியுள்ளார். அந்த வைத்திய அதிகாரி கூறிய வார்த்தையை விபத்துக்குள்ளான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொண்டிருந்துள்ளனர்.


உண்மையிலேயே நீதி நியாயங்களும் மனித நேயமும் இந் நாட்டில் உயிர் வாழ்வதற்குரிய செய்தியை சொல்வதற்கு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம்  சான்றாக அமையும். அதேவேளையில் இந்த வைத்தியசாலையில் இவற்றை விட வைத்தியர் சாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலன் விசாhரணை அதிகாரிகள் மேற்கொண்ட    விசாரiணைகளுக்கு நேர்மைத் தன்மையுடன்  வாக்கு மூலங்கள் வழங்கிய வைத்திய அதிகாரிகளும் மற்றும்  தாதிமார்களும் பற்றி நாம் என்னவென்று சொல்வது.


ஒரு சில விசங்கள் இருந்த போதிலும் ஈரமான இதயமுள்ள மனித நேயங்களை சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல மனிதர்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.


இதே போன்று தான் என்னுடைய நண்பனின் தந்தை அநுராதபுரம் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் பற்றி நேரடியாக அனுபவித்த சம்பவத்தை என்னிடம் தெரிவித்தார்.


அவர் ஒரு இருதய நோயாளி.  இந்த இக்கெட்டான கால கட்டத்தில் அவருக்கு நோய் அதிகரித்து அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்;பட்டிருந்தார். அவர் அக்கால கட்டத்தில் ஒரு விதமான மன அச்சத்துடன் சென்றார். ஆனால் அவர் சிகிச்சை பெற்று வந்த வாட்டில் பொறுப்பாக இருந்த வைத்தியர் முதல் தாதி மார்கள், சிற்றூழிர்கள், வைத்திய நிபுணர்கள் அனைவரும் சிநேகமாகப் பழகுவதுடன் எந்தப் பாகுபாடுகளுமின்றி சிகிச்சை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.


அந்த வாட்டுக்குப்பொறுப்பாகக் கடமையாற்றிய வைத்தியர் அவரை தனியாக அழைத்து நீங்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் மட்டுமல்ல இலங்கையிலுள்ள சகல முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டில் என்ன நடைபெறுகிறது என்று  நாங்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளோம். வைத்தியத் துறை என்பது எல்லாயின மக்களுக்கும் பொதுவான நோக்குடன் செய்யப்படும் புனிதமான சேவையாகும். நாங்கள் எல்லோரையும் ஒரு சமனாக மதித்தே கடமைளைச் செய்கின்றோம். நீங்கள் எங்களை வித்தியாசமாகப் பார்க்க வேண்டாம் என அந்த வைத்தியர் அவரிடம் தெரிவித்துள்ளார்.


இருத நோய் வைத்தியர் நிபுணர் கூட அவரை விசேடமாக அழைத்து சிறந்த முறையில் தம் வைத்திய சேவையை வழங்கியதோடு மட்டுமல்ல  இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவையும் கேட்டு தெரிந்து கொண்டாராம். தற்போது நாட்டில் முஸ்லிம் மீது எதிராக நடக்கும் சம்பவங்கள் எல்லாம் ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு உகந்தது அல்ல என அந்த வைத்திய நிபுணர் அவரிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.


அதே வைத்தியசாலையில் வாகன விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த கிராம  உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்வையிடுவதற்காக  அம்பாறையில் இருந்து கொழும்பு வந்திருந்த முஸ்லிம்கள் குடும்பம் ஒன்று வருவதாகக் கூறிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் போது அந்த கிராம உத்தியோகஸ்தர் உயிரிழந்து விட்டார். அங்கு வருகை தந்த முஸ்லிம் குடும்பத்தினர் அவருடைய பிரேதத்தை மட்டுமே பார்க்கமுடிந்தது. அவருடன் பேச முடியவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் அதில் முஸ்லிம் சகோதரிகளும் சகோதரர்களும் தம் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போன்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர்.


இந்தச் சோகக் காட்சியை அந்த வாட்டில் இருந்த  அத்தனை பெரும்பான்மையின மக்களும் அதிர்ச்சியுடன் நோக்கினர். அங்கு வருகை தந்திருந்த உயிரிழந்த கிராம உத்தியோகஸ்தரின் புதல்வர் கூறும் போது நாங்கள் எங்கள் ஊரில் எல்லோரும் எந்த  கருத்து வேறுபாடுகளுமின்றி புரிந்துணர்வுடனும் சகோதரத்துடனும் ஒற்றுமையாக வாழந்து வருகின்றோம். எங்களை இந்நாட்டு சில அரசியல்வதிகளும் அவர்களுடன் சேர்ந்து சோரம்போன சில இனவாத மதகுருமார்களும் இணைந்து எம்மை பிரித்து வேடிக்கை பார்க்க முற்படுகின்றனர். இந்தக் கொஞ்சக் கால வாழ்க்கைக்காக  நாங்கள் சண்டை பிடிக்கின்றோம் என்று என்னுடைய நண்பருடைய தந்தை வினவிய போது உயிரிழந்த கிராம உத்தியோகஸ்தருடைய புதல்வர் இவ்வாறு பதிலளித்துள்ளதாக அவர் கூறினார்.


இந்த சம்பவங்கள் எல்லாம் ரொம்பவும் மனதைத் தொடுவனவாகும். பாதிக்கப்பட்டுள்ள மனநிலையோடு உள்ளவர்களுக்கு ஆறுதல்வழங்கும் இடமாகவும் வெளிப்படையாகத் தோன்றும் இன நல்லிணக்கத்துக்கான காட்சியாகும். வைத்தியர்கள் பற்றிய சந்தேகமற்ற பார்வை, நம்பிக்கை, சேவை மனப்பாங்கு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்ளக் கூடிய பல நிகழ்கள் நொந்து போன மனதிற்கு மனத்திருப்தியை அளித்துள்ளன என்பதை நாங்கள் நேரில் காண விட்டாலும்  மற்றவர்கள் சொல்வதைக்; கேட்டு எம் மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இவை போன்று கேள்விப்படாத சம்பவங்கள் பல நூறுக்கானவை இருக்கலாம்.
நீங்கள் பல்வேறு சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்குபவராக இருந்த போதிலும் இந்;த இயக்கச் செயற்பாடுகளில் நீங்கள் கண்டு கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?


உண்மையிலேயே கண்டியில் பல்வேறு அமைப்புக்கள் முஸ்லிம்களுடைய பாதுகாப்பையும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே காலம் காலமாக இருந்து வரும் சக வாழ்வையும் ஒற்றுமையையம் பாதுகாப்பது தொடர்பில் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டன. நான் அவர்களுடன் சேர்ந்து இராப் பகல் இன்றி தீவிரமாகப் பணியாற்றினேன்.


கண்டியிலுள்ள உயர் பீட பௌத்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை பல விடுத்தம் சந்தித்தோம். அவர்கள் முஸ்லிம் மீது வைத்துள்ள சந்தேகங்களை களைவதற்கும், முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயங்களை புரிந்து கொள்வதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது. பொலிஸ் உயர்அதிகாரிகள், இராணு உயர் அதிகாரிகள், கண்டியில் எதிர்கட்சியையும் ஆளும் கட்சியைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றப் பிரதிநிதிகள், பெரும்பான்மையின சிவில் சமூக அமைப்புக்கள் என சகலரையும் சந்தித்து இறுக்கமான உறவைப் பலப்படுத்தக் கூடிய வகையில் அவர்களுடன் கலந்துரையாடிடல்களை நாங்கள் தொடரேச்சியாக நடத்தினோம்.



உண்மையிலேயே முஸ்லிம் பற்றிய தெளிவான சிந்தனையையும் தனித்துவமான இஸ்லாமிய கலாசாரம் பற்றிய அறிவையும் விரிவாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்த இந்த சூழல் உதவியது. அது மட்டுமல்ல இந்த சந்திப்பினால் பேரினவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு கண்டியில் இடைவெளிகளை நிரப்ப இயலாது போயிற்று.
தம் இஸ்லாமிய கலாசாரத்தையும் அடையாளத்தையும் எதிராகப் பார்க்கின்றவர்களுக்கு மத்தியில் அதன் பொதுவான பண்பையும் பெறுமதியையும் தெளிவுடன உணர்த்த முக்கிய நடவடிக்கைகள் நாங்கள் எடுத்துள்ளோம் என்றார்.
உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்திற்குப் பின்னர் பெரும்பான்மை இன மக்கள் எம்முடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்..? உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்திற்குப் பின்னர் பெரும்பான்மை இன மக்கள் எம்முடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்..? Reviewed by Madawala News on August 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.