கணவர் தன்னை அதிகமாக காதலிப்பதால் விவாகரத்து கேட்ட மனைவி... ஷரியா கோர்ட்டில் வழக்கு விசாரணை.


அதீத அன்பு செலுத்தும் கணவர் தன்னை எதிர்த்துக் கூட பேச மறுக்கிறார் 
என்பதால் மனைவி விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
"கணவர் என்னை காதலிக்கவில்லை; கொடுமை செய்கிறார். அக்கறை இல்லை" இப்படி பல காரணங்களை முன்வைத்து விவாகரத்து கேட்கும் நிலைபோய் என்னை கணவர் அதிகமாகக் காதலிக்கிறார் என ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த பெண் விவாகரத்து கேட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விவாகரத்துக்காக அவர் கூறிய காரணங்கள், பெண்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

ஆம், கணவர் தன்னை எந்த கேள்வியும் கேட்பதில்லை. நான் உதவி கேட்பதற்கு முன்பே வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார். சமையல் கூட எனக்காக பிடித்தாக செய்து வைக்கிறார். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறார். 


என் மீது கோபமே படுவதில்லை. என்ன சொன்னாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்கிறார். எங்களுக்குள் எந்த பிரச்னை, சண்டை எதுவுமே இல்லை. இது எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. 


இருவருக்குள்ளேயும் எந்த சண்டை, கோபம் இல்லாமல் வாழ்க்கை செல்வது நரகம் போல் உள்ளது. குறிப்பாக அவர் ரொமாண்டிக்காக நடந்து கொள்வதும், தினம் தினம் பரிசுகளால் சப்ரைஸ் கொடுப்பது எல்லாமே சரியாகச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு சின்ன விவாதங்கள் கூட எங்களுக்குள் நடக்கவில்லை.


அவர் மிகவும் கனிவானராக இருக்கிறார் என்பதையும் அடிக்கடி சொல்கிறார். இருப்பினும் விவாகரத்து வேண்டும் என்பதையும் உறுதியாக தெரிவிக்கிறார்.உடல் எடை அதிகமாக உள்ளார் என்று நான் சொன்னதைக் கேட்டு உடற்பயிற்சி, டயட் என்று மேற்கொண்டார். ஆனால், உடற்பயிற்சியால் அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதே மிச்சம் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.


புஜைரா நகரில் உள்ள ஷரியா கோர்ட்டில் தனது விவகாரத்து மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

நன்றி : news 18

கணவர் தன்னை அதிகமாக காதலிப்பதால் விவாகரத்து கேட்ட மனைவி... ஷரியா கோர்ட்டில் வழக்கு விசாரணை.  கணவர் தன்னை  அதிகமாக காதலிப்பதால் விவாகரத்து கேட்ட மனைவி...  ஷரியா கோர்ட்டில் வழக்கு விசாரணை.  Reviewed by Madawala News on August 24, 2019 Rating: 5