கண்காணிப்பு அமைச்சு பதவியில் இருந்து இருபது பேர் ராஜினாமாகண்காணிப்பு அமைச்சு பதவியில் இருந்து 20 பேர் விரைவில் ராஜினாமா
 செய்ய உள்ளதாக ஆளும் தரப்பு எம் பி ஹேஷா விதானகே குறிப்பிட்டார்.

தான் பதவி வகித்துவரும் விளையாட்டுத் துறை அமைச்சின் கண்காணிப்பு அமைச்சுப் பதவியை இன்று(23) இராஜினாமா செய்ய திர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே  தெரிவித்தார்.

கடந்த வாதம்  தினம் ஐ.தே.கட்சியின் பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசேகர தனது கண்காணிப்பு அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்திருந்தார்.

தமக்கு இந்தப் பொறுப்பினால் செய்வதற்குரிய எந்த கடமையும் இல்லையென்பதனால் தமது பொறுப்பை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.  

இந்த நிலையில் மேலும் 20 பேர் தங்கள் கண்காணிப்பு அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கண்காணிப்பு அமைச்சு பதவியில் இருந்து இருபது பேர் ராஜினாமா கண்காணிப்பு அமைச்சு பதவியில் இருந்து இருபது பேர் ராஜினாமா Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5