தம்புள்ள, சீகிரிய, அநுராதபுர சமய வழிபாடுகளில் ஈடுபட யாத்திரை சென்றவர்களால் ஏற்பட்ட மோதல்... - Madawala News Number 1 Tamil website from Srilanka

தம்புள்ள, சீகிரிய, அநுராதபுர சமய வழிபாடுகளில் ஈடுபட யாத்திரை சென்றவர்களால் ஏற்பட்ட மோதல்...


மித்தெனியவில் இருந்து தம்புள்ள பகுதிக்கு சமய வழிபாடுகளில் ஈடுபட வருகை தந்தவர்களுக்கும்
தம்புளை பகுதி வீடொன்றில் வசித்த சிலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் தம்புளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மித்தெனியவில் இருந்து குழு ஒன்று தம்புள்ள, சீகிரிய மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்று இரவு குறித்த குழுவினர், தம்புள்ள – குருணாகல் வீதியில் அமைந்துள்ள மரக்கறிக்கடை ஒன்றில் காய்கறிகளை வாங்க முற்பட்டுள்ளனர்.

அப்போது பஸ் ஒன்றில் இருந்து இறங்கிய போதையில் இருந்த குழு ஒன்று பக்கத்தில் இருந்த வீடொன்றின் பின்புறத்தில் சிறுநீர் கழிக்க முற்படும் போது குறித்த வீட்டார் அச்சமடைந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் வீட்டாருக்கும், சுற்றுலா சென்றவர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் சுற்றுலா சென்றவர்களில் ஒருவர் குறித்த வீட்டில் இருந்த தளப்பாடங்கள் போன்றவற்றை உடைத்து சேப்படுத்தியதாக பொலிஸார் கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த வீட்டில் இருந்த ஒருவர் சுற்றுலா சென்றவர்களை பொல்லால் தாக்கியதில் காயமடைந்த அவர், தம்புளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இதனை அடுத்து சுற்றுலா சென்றவர்களுக்கும், வீட்டாருக்கும் இடையில் ஏற்பட இருந்த பாரிய மோதலை பிரதேச மக்களும், பொலிஸாரும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதுவரை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த இருவர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், அவர்களை தம்புள்ள நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளனர்.

அதிக போதையே சம்பவத்திற்கு காரணம் என தம்புள்ள பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
தம்புள்ள, சீகிரிய, அநுராதபுர சமய வழிபாடுகளில் ஈடுபட யாத்திரை சென்றவர்களால் ஏற்பட்ட மோதல்... தம்புள்ள, சீகிரிய, அநுராதபுர  சமய வழிபாடுகளில் ஈடுபட யாத்திரை சென்றவர்களால் ஏற்பட்ட மோதல்... Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5