கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையாது.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமை,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முழு நாட்டையும் வெற்றி அடைய வைக்கக் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் துன்பங்களை உணர்த, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை பெறகூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடவுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் கை கோர்த்துள்ளதாகவும், அதனால் அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவதாக தெரிவித்த அவர், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே கட்சியின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையாது. கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையாது. Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.