நாட்டிற்கு தேவை முதுகெழும்பு உள்ள தலைமைத்துவமே தவிர புரொய்லர் கோழிகள் அல்லநாட்டிற்கு தேவை முதுகெழும்பு உள்ள தலைமைத்துவமே தவிர புரொய்லர்  கோழிகள் அல்ல
என நாமல் ராஜபக்‌ஷ எம் பி குறிப்பிட்டார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டிற்கு தேவை முதுகெழும்பு உள்ள தலைமைத்துவமே தவிர புரொய்லர் கோழிகள் அல்ல.புரொய்லர் கோழி ஒன்றை கடைசி நேரத்தில களமிறக்குவதே ஐக்கிய தேசிய கட்சியின் திட்டமாக உள்ளது.
புரொயலர் கோழிகள்  நீண்ட காலம் தாங்காது பார்க்க ஆரோக்கியமாக இருந்தாலும் அவை ஆரோக்கியமில்லாத ஒரு பிராணி.அதே நிலைதான் இன்று ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும்.ஐக்கிய தேசிய கட்சி இன்று ஒரு வேட்பாளரை களமிறக்க திண்டாடுகின்றது
கடைசி நேரத்தில் ஒரு புரொய்லர் கோழியை களத்தில் இறக்கி 2015 ஐ போல் மக்களை ஏமாற்றவே ஐக்கிய தேசிய கட்சி இம்முறையும் முயற்சிக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பாடம் படித்து விட்டார்கள் கம்பு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலை தோன்றியது. இந்த முறை மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் என  என அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு தேவை முதுகெழும்பு உள்ள தலைமைத்துவமே தவிர புரொய்லர் கோழிகள் அல்ல நாட்டிற்கு தேவை முதுகெழும்பு உள்ள தலைமைத்துவமே தவிர புரொய்லர்  கோழிகள் அல்ல Reviewed by Madawala News on August 14, 2019 Rating: 5