ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா? - நீதிமன்றைத்தை நாடிய ஜனாதிபதி

எம்.எப்.எம்.பஸீர்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள்
குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை முன்வைக்கப்பட்டிராத சந்தர்ப்பத்தில்  மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான  வாய்ப்புக்கள் உள்ளதா என வியாக்கியானம் தருமாறு கோரியே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார். 
அதன்படி ஜனாதிபதியின் குறித்த விண்ணப்பம் மீது எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் விசாரணைகளை  முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது.
அதன்படி உயர் நீதிமன்றின் தீர்ப்பானது, வியாக்கியானமாக இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா? - நீதிமன்றைத்தை நாடிய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண  சபை தேர்தலை நடத்தலாமா? - நீதிமன்றைத்தை நாடிய ஜனாதிபதி Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5