சஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு !!
அமைச்சர் மங்கல சமரவீர ஏற்பாட்டில் சஜித் பிரமதாச கலந்துகொள்ளூம் கூட்டம்  
மாத்தறையில்  இடம்பெற உள்ள நிலையில் ஆளும்தரப்பு அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு  இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் பிரபலம் ஒருவர் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.

மாலை 4 மணிக்கு சஜித் கலந்துகொள்ளும் கூட்டம் மாத்தறையில் ஆரம்பமாக உள்ள நிலையில் இரவு 7 மணிக்கு அலரி மாளிகையில் அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கும் குடும்பத்துடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களும் இந்த விருந்தில் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு !! சஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு !! Reviewed by Madawala News on August 20, 2019 Rating: 5