காலை ஏழரைக்கு ஒரு சில அமைச்சர்களே வருவதால், அமைச்சரவை கூட்ட நேரம் மாற்றப் பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

காலை ஏழரைக்கு ஒரு சில அமைச்சர்களே வருவதால், அமைச்சரவை கூட்ட நேரம் மாற்றப் பட்டது.


அமைச்சரவை கூட்டத்தை இனி செவ்வாய்க்கிழமை காலை 
எட்டரை மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை கூட்டம் காலை ஏழரை மணிக்கே கூடியது. அமைச்சர்களை காலை வேளையில் வரவைத்ததாக ஜனாதிபதியும் பொது மேடைகளில் சொல்லிவந்தார்.


ஆனால் இன்று அமைச்சரவை கூடியபோது நாலைந்து அமைச்சர்களே வந்திருந்தனர். கடந்த வாரமும் இப்படியே அமைச்சர்கள் வந்திருந்தனர்.பலர் தாமதமாகவே வருகை தந்தனர்.


இதனால் அமைச்சர்மாரின் சிரமத்தை கருத்திற்கொண்டு இனி அமைச்சரவை கூட்டத்தை காலை எட்டரை மணிக்கு கூட்ட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

தமிழன lk
காலை ஏழரைக்கு ஒரு சில அமைச்சர்களே வருவதால், அமைச்சரவை கூட்ட நேரம் மாற்றப் பட்டது. காலை ஏழரைக்கு ஒரு சில அமைச்சர்களே வருவதால், அமைச்சரவை கூட்ட நேரம் மாற்றப் பட்டது. Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5