பெருநாள் தினத்தில் ஊரையே சோகத்தில் ஆழ்த்திய குழந்தை ஷஸாட் அஹமட் இன் உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பெருநாள் தினத்தில் ஊரையே சோகத்தில் ஆழ்த்திய குழந்தை ஷஸாட் அஹமட் இன் உயிரிழப்பு.

 
(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த ஷாஹீர் ஹுஸைன், பாத்திமா நிஃலாஹ்  
ஆகியோர்களின் ஏழு மாதக் குழந்தை ஷஸாட் அஹமட் பெருநாள் தினமான இன்று (12) உயிரிழந்துள்ளது.
 
ஒரிரு நாட்களாக காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி அக் குழந்தை பெருநாள் தினமான இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
குழந்தையின் ஜனாஸாவைப் பார்வையிட ஓட்டமாவடி,  வாழைச்சேனை, மீராவோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
 
ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெருநாள் தினத்தில் ஊரையே சோகத்தில் ஆழ்த்திய குழந்தை ஷஸாட் அஹமட் இன் உயிரிழப்பு. பெருநாள்  தினத்தில் ஊரையே சோகத்தில் ஆழ்த்திய குழந்தை ஷஸாட் அஹமட் இன் உயிரிழப்பு.  Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5