மஹிந்தவே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது - அசாத் சாலி - Madawala News Number 1 Tamil website from Srilanka

மஹிந்தவே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது - அசாத் சாலி


 –அஷ்ரப் ஏ சமத் – 
மஹிந்த அரசாங்கத்தின்  கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் 
சிறையில் அடைப்பதற்கு மைத்திரிபால - ரணில் அரசாங்கத்துக்கு இன்னும் போதுமான காலம் இருப்பதாகவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு ,எஞ்சியிருக்கும் நாட்களிலாவது நிறைவேற்ற  வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத்  சாலி தெரிவித்தார். கொழும்பில் இன்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,


 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாது கோட்டாவால்.  ஒருபோதும் வெற்றி பெற முடியாது. 


மொட்டு கட்சியினர் மகிந்தவை நிறுத்தினாலும் மண்கௌவியே தீருவர். பெரும்பான்மையின  வாக்குகள் மூன்று பெரும்பான்மையின  கட்சிகளுக்கு பிரிந்து செல்லும். எனவே மொட்டு கடசியினர் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கனவு காண்கின்றனர். 


கடந்த அரசாங்கத்தின்  கள்வர்களும் ஊழல் வாதிகளும்  இணைந்து தோற்றுவித்த இந்த மொட்டு கட்சியில் ஜனநாயகத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது? 


கடந்த  ஆட்சியில்  சட்டத்தை மதிக்காது, நீதிக்கு தலைவணங்காது செயல்பட்ட கோட்டா , விமல் வீரவன்ச போன்றவர்களின்  நடவடிக்கைகளை மக்கள் மீண்டும் நினைத்து பார்க்கின்றனர். 

ஊடகவியலாளர்களான  லசந்த, எக்னலிகொட  கீத் நோயர் மற்றும் ரகர் வீரர் தாஜூதீன் ஆகியோரை துடிக்க துடிக்க, கொன்ற குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கின்றது. ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பொருளாதார, அமைச்சர் அத்துடன் எதிர்கால அரசியல் வாரிசையும் ஒரே குடும்பத்துக்குள் வைத்து கொண்டு மீண்டும் கொள்ளையாடிக்க ஆயத்தமாகின்றனர். மக்களின் வாக்குகள் மீண்டும் தேவையானால் "ஒட்டுமொத்த குடும்பமும் முன்வந்து,  ஊடகவியாளர் மாநாட்டில் நாங்கள் சுத்தமானவர்கள்" என்று சொல்ல வேண்டும். என்னை  பொறுத்தவரையில் கோத்தாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என நான் அடித்து கூறுகின்றேன்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாரிய அழுத்தத்தின் பேரிலேயே  இவரது பெயரை அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது மகிந்த ராஜபக்ஷ  "கோ.." என கூறும் போது, நாடு முழுவதும்  வெடிகள் போட வேண்டும் என அரங்கேற்றிவயர்கள் விமல் வீரவன்ச போன்றவர்களாகும். இவ்வாறு ஆசாத் சாலி தெரிவித்தார்.
மஹிந்தவே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது - அசாத் சாலி  மஹிந்தவே  போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது - அசாத் சாலி Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5