பா. ஜ.க வின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உயிரிழந்தார்.


இந்திய மத்திய அரசு செயல்படுத்திய ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய 
பங்காற்றியவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மோடியின் அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம்பெறவில்லை. இதுதொடர்பாக, தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.


அருண் ஜெட்லி மத்திய அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இருந்தே அவரது உடல்நிலையில் சிக்கல் நீடித்தது. இதனால், பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 


சமீபத்தில்தான் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 9-ம் தேதி, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெட்லி.


அவரது உடல்நிலை பற்றி ஆகஸ்ட் 10-ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ``தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இதையடுத்து மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம் பா.ஜ.க-வை சேர்ந்த பல தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜெட்லியை நேரில் சந்திக்கச் சென்றனர். அப்போதே ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன.


இந்நிலையில் கடந்த 15 நாள்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வந்த 66 வயதான அருண் ஜெட்லி சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 12.07 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 


உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அருண் ஜெட்லி பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்.
அருண் ஜெட்லி உயிரிழந்ததை அடுத்து ஹைதரபாத் பயணத்தில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு தற்போது டெல்லி திரும்பிக்கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடியும் விரைவில் இந்தியா திரும்புவார் என பா.ஜ.க வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பா. ஜ.க வின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உயிரிழந்தார். பா. ஜ.க வின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உயிரிழந்தார். Reviewed by Madawala News on August 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.