மடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.


மடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு
   St George 's University Of London  பல்கலைக் கலகத்தில்   வைத்திய பீடத்துக்கு தெரிவாகியுள்ளார்.

மடவள பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவரும், மதீனா தேசிய பாடசாலையின் பழைய்ய மாணவருமான தஷ்ரிப் ஜய்னுதீன் , மற்றும்  கொழும்பு; 2 ச் சேர்ந்த வரும், கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரியின் பழைய்ய   மாணவியுமான அஸ்மியா ஆரிப் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியுமான ஆதிபா அவர்கள்; தான் தோற்றிய மூன்று பாடங்களிலும் அதி சிரேஷ்ட பெறுபேறான A* சித்திகளை பெற்று தனது பெற்றோர், உறவினர், நண்பர்கள், மற்றும் தனது  பெற்றோரின் தாயகம் என சகலருக்கும் நன் மதிப்பை பெற்றுத் தந்துள்ளார்.

1. Biology - A - * உயிரியல் - ஏ*, 
2. Chemistry – A * வேதியல் -ஏ*,
3. Maths – A* கணிதம் – ஏ*,

நேற்று 15/08/2019 வியாழக் கிழமை London மாநகரிலுள்ள, வைத்தியத் துறைக்கு பெயர் போன St George's University Of London எனும் மதிப்பு மிகு பல்கலைக் கலகத்தில் கற்பதற்கான  அனுமதியை  பெற்றுக் கொண்டதானது, அவரின் விடா முயட்சிக்குக் கிடைத்த அழகிய பரிசு என்பதாக பெற்றோர் அக மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றனர்.

ஆதிபா தஷ்ரிப் தனது உயர் தரக்  கல்வியை Slough நகரிலுள்ள Herschel Grammar School ல் 2012 முதல் கற்றது குறிப்பிடத் தக்கது. அத்தோடு  எமது ஊரில் மிக பிரபல்யமான ஓய்வு பெற்ற (Physics) பௌதீகவியல் ஆசிரியர் அல்ஹாஜ் சரூக் ஆசிரியரின் சகோதரரின் மகளே ஆதிபா வாகும்.


வளர்ந்து வரும் இளம் சமூகத்துக்கு மிக சிறந்த வழிகாட்டியாகவும் முழு மனித சமூகத்துக்கும் நிகரிலா சேவை புரியக் கூடியவராகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் இவரைப் பொருந்திக் கொள்வதோடு, இவருடைய  கல்விப் பயணத்தை இலகு படுத்தி வைப்பத்தோடு, மன வலிமையையும், பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள்வானாக என்று, நாம் அனைவரும் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப் போமாக.

ஆக்கம்: அஷ் ஷேய்க், அல்ஹாஜ், இஸ்மாயில்  நளீமி,பீ. ஏ. (இலங்கை)  
முதல்வர், 
அல்பயான் அரபு மையம், லெஸ்டர், இங்கிலாந்து,
மடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.  மடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு  தெரிவானார். Reviewed by Madawala News on August 16, 2019 Rating: 5