கல்முனை, பரஹகதெனிய, தவ்லகல, மாளிகைக்காடு, செம்மண்ஓடை, மீராவோடை, மருதமுனை கடற்கரை பிரதேசங்களில் இடம்பெற்ற இன்றைய பெருநாள் தொழுகை நிகழ்வுகள்.


கல்முனையில்  ஹஜ் பெருநாள் தொழுகை
(எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.அஸ்ரப்கான்)

கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா மற்றும்  ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில்
ஹஜ் பெருநாள் தொழுகை கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள  ஹுதா திடலில் இன்று (12/8/2019)  நடைபெற்றது இதில் ஏராளமான  ஆண்கள் , பெண்கள்   கலந்து கொண்டனர்.

இப்பெருநாள்  தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வான் (றியாதி) அவர்கள் நடாத்தி வைத்தார்.




புனித  ஹஜ்ஜுப் பெருநாள் திடலில் தொழுகை
பறஹகதெனிய ஜாமிஉத் ஜும்ஆப் பள்ளிவாசலின்  ஏற்பாட்டில் புனித  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பறகஹதெனிய அரபுக் கல்லூரியின் திடலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருநாள் தொழுகையினையும் குத்பா பேருரையிiயும்  மௌலவி அன்சார் ரியாதி நடத்தி வைத்தார்.
இன்றைய நிலையில் முஸ்லிம்கள் ஏனைய மக்களுடன் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நல்லுறவுடனும், அன்னோன்யத்துடனும் வாழ வேண்டும் எனவும் நாட்டின் எதிர்கால சுவிட்சத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ஒருமைப்பாட்டுக்காக நாம் பிரார்த்தனை புரிய வேண்டும் என்று தமது குத்பா பேருரையில் நிகழ்த்தினார்.
இதில் பெரு எண்ணிக்கையிலான ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி




உடுநுவரை தவ்லகல ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜாமத்தினால் நடாத்தப்பட்ட ஈதுல் அல்ஹா பெருநாள்  திடல் தொழுகை  இன்று மிகவும் சிறப்பாக ஆன் பெண் இருபாலாரும் கலந்து நடைபெற்றது .



ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் !!

மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று(12) ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இத்தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையினை மௌலவி ஏ.ஆர்.முகம்மட் சப்ராஸ் நடத்தி வைத்ததுடன் குத்பா பேருரையினையும் நிகழ்த்தினார்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரைத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெருநாள் தொழுகை காலை 6:30 மணிக்கு இன்று(12) நடைபெற்றது. பெருநாள் தொழுகை விசேட உரையை மௌலவி. ஷாமில் மஜீதி நிகழ்த்தினார்.

நூருள் ஹுதா உமர்


எஸ்.எம்.எம்.முர்ஷித் & எச்.எம்.எம்.பர்ஸான்
முஸ்லீம்களின் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை இன்று திங்கள் கிழமை இலங்கை வாழ் முஸ்லீம்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த வகையில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் ஏற்பாட்டில் திறந்த வெளியிலான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் இன்று (12.08.2019) திங்கள் கிழமை செம்மண்ஓடை அல்ஹம்ரா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது நாடாத்தி வைத்தார் இதில் கல்குடாத்தொகுதி முஸ்லீம் பிரதேசங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது இன நல்லுறவை பேணும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ். ஜெயசுந்தர வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டோருக்கு கைலாகு கொடுத்து தங்களது பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.




(எம்.ரீ.எம்.பாரிஸ்) 
மட்டக்களப்பு மீராவோடை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் பிரதான புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேற்று காலை இடம்பெற்றது.


பள்ளிவாயலின் பேஷ்டி இமாம் எம்.யூ.எம். பசீர் அஸ்ஹரி பெருநாள் தொழுகையினையும் குத்பா பேருரை நிகழ்த்தினார்.

இதன்போது நாட்டில் நிலையான சமாதானம் அமைதி நிலவ இறை பிரார்த்தனைகளும் இடம்பெற்றனர்.

மிக நீண்ட கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இப்பள்ளி வாயிலுக்கு இம்முறை பெருநாள் தொழுகைக்காக ஆண்களும்,பெண்களுமாக குடும்ப சகிதம் ஆயிரக்கணக்கானோர் தொழுகையில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.


புனித ஹஜ் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

புனித ஹஜ் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நேற்று(12-08-2019)காலை 6.20 மணிக்கு இடம்பெற்றது.இங்கு கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.இதில் பெரும் அளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.


கல்முனை, பரஹகதெனிய, தவ்லகல, மாளிகைக்காடு, செம்மண்ஓடை, மீராவோடை, மருதமுனை கடற்கரை பிரதேசங்களில் இடம்பெற்ற இன்றைய பெருநாள் தொழுகை நிகழ்வுகள். கல்முனை, பரஹகதெனிய, தவ்லகல,  மாளிகைக்காடு, செம்மண்ஓடை, மீராவோடை, மருதமுனை கடற்கரை பிரதேசங்களில் இடம்பெற்ற இன்றைய பெருநாள் தொழுகை நிகழ்வுகள். Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.