பாடசாலைகளுக்குச் செல்லாத நிலையில் 49,762 சிறுவர்கள் ; கல்வி அமைச்சு

 நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்குச் செல்லாத 5 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட 49,762
சிறுவர்கள் உள்ளதாக கல்வி அமைச்சின் ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

   நாட்டில் ஐந்து வயதுக்கும் பதினேழு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் 46 இலட்சத்து 39 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுள் மேற்படி எண்ணிக்கையானோர் நாட்டின் எந்தவொரு பாடசாலைகளுக்கும் செல்லாதுள்ளனர்.


விகிதாசார அடிப்படையில் 1.1 வீதமானோர் இவ்வாறான நிலையில் உள்ளனர்.


   கட்டாயக் கல்வி சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு சிறுவர்கள் பாடசாலை செல்லாதிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான பிரதான காரணமாக  வறுமை, பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும்  பெற்றோரின் கல்வி அறிவின்மை என்பன காணப்படுவதாகவும் கல்வி அமைச்சின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


   இவ்வாறு பாடசாலை செல்லாத மாணவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் அங்கவீனம், மந்தபுத்தி, விசேட தேவை உடையவர்களாக உள்ளனர். இவர்களுக்கான பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொடுப்பதில் அவர்களது பெற்றோர் அக்கறையற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


   பொதுவாக வறுமை, பாடசாலைக் கல்வியில் அக்கறையின்மை காரணமாக ஐந்து வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்டோரில் 2.8 சத வீதமானோர் காணப்படுவதாகவும், இவர்கள் இடை விலகல்களாக உள்ளனர் என்றும் கல்வி அமைச்சின் ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
பாடசாலைகளுக்குச் செல்லாத நிலையில் 49,762 சிறுவர்கள் ; கல்வி அமைச்சு பாடசாலைகளுக்குச் செல்லாத நிலையில் 49,762 சிறுவர்கள் ; கல்வி அமைச்சு Reviewed by Madawala News on August 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.