ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர்.


ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும்
 இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிசங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு சம்மந்தமான பிரச்சினைகள் எழுந்துள்ளன.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் ரவிராஜ், மகேஸ்வரன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்த கொலை சம்பங்கள் குறித்த விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்திருந்தாலும் சாட்சிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
சாட்சிகள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான சூழ்நிலை மீண்டும் ஏற்படுவதை மக்கள் விரும்பமாட்டார்கள்.


அதேநேரம் தற்போதைய ஆட்சியிலேயே பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர். Reviewed by Madawala News on August 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.