இறுதியாக கைது செய்யபட்ட சுமார் 15 பேரின் பெயர்களுடன் ''அபூ'' வை சேர்த்த சஹ்ரான் .


தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர்களாக செயற்பட்டுவந்த ஜமாத்தே
மில்லத்து இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அம்பாறையில்  நேற்று (20) கைது செய்யப்பட்டிருந்தனர்.  


 அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய அம்பாறை வலய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், பயங்கரவாதி ஸஹ்ரானினால் நடத்தப்பட்டுவந்த நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள் என அரச புலனாய்வு சேவையின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இச்சந்தேக நபர்களில் ஒருவர் கண்டி, கெலிஓயா, முருதகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்தவரான ஸாஹிர் மொஹமட் அஹ்ஷன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் என்றும் இவருக்கு ஆயுதப்பயிற்சியின் பின்னர் அபூ அமாரா என்ற புனைபெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மற்றைய சந்தேகநபர் இல.5 ஹிரசமுர ஒழுங்கை காலி என்ற முகவரியைச் சேர்ந்தவரான மொஹமட் அவூதான் அனிஸ் மொஹமட் என்ற இயற்பெயர் கொண்டவர் எனவும் நுவரெலியா பயங்கரவாத முகாமில் பயிற்சி பெற்றதன் பின்னர் அபூ சுபைஹிர் எனப் புனை பெயர் சூடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


 இதேவேளை, அம்பாறை அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய அம்பாறை வலய குற்றப் பிரிவினரால் இதுவரையில் ஆயுதப்பயிற்சி பெற்ற 15 பயங்கரவாதிகள் கைது செய்ய ப்பட்டுள்ளதாகவும் அவர்களில் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட 16 வயதான சிறுவனான மொஹமட் நௌபர் அப்துல்லாஹ்வும் (அபூ அஸன்) அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.


 தற்போதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் மேற்படி மூன்று சந்தேக நபர்களைத் தவிர ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவனான வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த மொஹமட் நௌஷாட் உமர் மற்றும் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மொஹமட் இஸ்மாயில் மொஹமட் சல்மான் ஆகியோர் புலனாய்வு தகவலுக்கமைய கடந்த 4 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.



 இதனையடுத்து, மாவனெல்லை - சஹனகம பகுதியைச் சேர்ந்த, ஒலுவில் பல்கலைக்கழக மாணவரான மொஹமது தாஹீர் ஹிதாயதுல்லாஹ் (அபுதுராப்), கெலிஓயா கலிகமுவ பகுதியைச் சேர்ந்த மொஹமட் மன்சூர் செய்புல்லா ஹக் (அபூ சஹிட்) மற்றும் மாவனெல்லை –வல்பொலதெனிய பகுதியை சேர்ந்த முஸ்தார் அலி அம்மர் (அபூ ஹிந்த்) ஆகியோர் கடந்த 5 ஆம் திகதி அம்பாறையில் கைதுசெய்யப்பட்டனர்.



 அவ்வாறே, ஹிஜ்ரா மாவத்தை, கதுருவலை – பொலன்னறுவையைச் சேர்ந்த மொஹம்மட் பாவா மொஹம்மட் ரூமி (அபூ அக்ராத்), மாவனெல்லை – தனாகமவைச் சேர்ந்த மொஹம்மட் ரியால் மொஹம்மட் சாஜித் (அபூ சல்மான்), வரகாபொல, துல்ஹிரிய - நான்ஹெல்ல பகுதியைச் சேர்ந்த, மொஹம்மட் ரம்சின் ருஷ்தி அஹம்ட் (அபூ அல்வகார்) ஆகியோர் கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.


 மேலும் மேற்படி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களான மாவனெல்லையைச் சேர்ந்த மொஹம்மட் தாசீம் மொஹம்மட் அகீல் (அபூ சுலைமான்), ஹிஸ்புல்லாஹ் கான் ஹுஸ்னி அஹமட் (அபூ ஹம்தா) மற்றும் அப்துல் ஹலீம் மொஹம்மட் நிஜாம் (அபூ நிஜாரா) ஆகிய மூவர் கடந்த 15 ஆம் திகதி அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ரெ.கிறிஷ்ணகாந்த் ; METRO )
இறுதியாக கைது செய்யபட்ட சுமார் 15 பேரின் பெயர்களுடன் ''அபூ'' வை சேர்த்த சஹ்ரான் . இறுதியாக கைது செய்யபட்ட சுமார் 15 பேரின் பெயர்களுடன் ''அபூ'' வை சேர்த்த சஹ்ரான் . Reviewed by Madawala News on August 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.