சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு களை மறுக்கும் சீனா இலங்கையின் ஆதரவையும் கேட்கிறது.


சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் வாழும் 
முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இந்த நிலையில் இது தொடர்பில் இலங்கையின் ஆதரவை சீன அரசாங்கம் நாடியிருக்கிறது.


சின்ஜியாங் மாகாணத்தில் பெருவாரியான சித்திரவதைத் தடுப்பு முகாம்களை சீன அரசாங்கம் அமைத்திருப்பதாகவும், உய்குர் இனத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் பெருமளவிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


மேற்குலக நாடுகளில் சில அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சின்ஜியாங்கில் சீனா கடைப்பிடிக்கும் கொள்கை மீது தொடர்ச்சியாகத் தாக்குதலை மேற்கொள்வதை அவதானிக்கும்போது அதிர்ச்சியாக இருப்பதாகக் கூறியிருக்கும் கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் ஷெங் சியூயுவான், அந்த மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் சித்திரவதைத் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மனித உரிமைகள் மீறப்படுவதாகப் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.


இந்த நிலையிலேயே பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஒத்துழைப்பைப் பலப்படுத்தவும், இரு நாடுகளினதும் வெவ்வேறுபட்ட இன,மதக் குழுக்களுக்கிடையிலான பரிமாற்றங்களுக்கும் அமைதி, சமாதானத்தைப் பேணுவதற்கும் சீனாவுடன் சேர்ந்து பாடுபடுமாறு இலங்கைக்கு சீனத்தூதுவர் அழைப்பு விடுத்தார்.  Metro
சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு களை மறுக்கும் சீனா இலங்கையின் ஆதரவையும் கேட்கிறது. சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு களை  மறுக்கும் சீனா இலங்கையின் ஆதரவையும் கேட்கிறது. Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.