இலங்கையில் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட அமெரிக்கா தயார்.


இலங்கையில் அடுத்த தேர்தலில் அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்துடனும்
புரிந்துணர்வுடன் செயற்பட அமெரிக்கா தயார் என அந்நாட்டுக்கான தூதுவர் அலெய்னா டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சி அல்லது எந்த நபர் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை அரசாங்கத்துடனும், இலங்கை மக்களுடனும் அமெரிக்க அரசாங்கம் முன்னெடுத்துவரும் தொடர்புகளுக்கு எந்தவகையிலும் பாதிப்பு வராத வகையில் செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவி வரும் தொடர்பு தொடர்பில் பல தரப்பிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்குள் அமெரிக்காவின் படை முகாம் ஒன்றை அமைக்கவோ, எந்தவித இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் தூதுவர் மேலும் கூறியுள்ளார்.  D C
இலங்கையில் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட அமெரிக்கா தயார். இலங்கையில் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த  அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட அமெரிக்கா தயார். Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.