அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது.


அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
 27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.


பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக ( அரசுக்கு ஆதரவாக) 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.


அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.


விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6.35 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.


குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரரணை தோல்வியடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது. அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது. Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.