மண்ணினால் சோறு சமைத்து விட்டு, அச்சோற்றில் மண்ணினை தேடுவதுதான் இன்றைய அரசியலில் முஸ்லிம் காங்கிரசின் நிலை.


மன்ணினால் சோறு சமைத்து விட்டு அச்சோற்றில் மண் இருக்கின்றதா.? என தேடும் அவசியம் கிடையாது.
இருப்பது எல்லாமே குப்பைகள்தான். முஸ்லிம்கலின் உரிமைகளுக்காக போராடாத கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் அவர்களுடைய வியாபாரத்தினை மிகவும் நுனுக்கமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.


இப்பொழுது தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து தங்களுடைய வியாபாரத்தை செய்து வருகின்றனர். எந்த உரிமைகளுக்காக தமிழ் கட்சிகளை அழைத்து முஸ்லிம் காங்கிரஸ் கடந்த கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்தது.? தமிழர்களின் உரிமைகளுக்காக பதவிகளை ஏற்க மறுத்துக்கொண்டிருந்த தமிழ் கட்சிகள் எதற்காக தற்பொழுது கொள்கைகளை புறந்தள்ளி விட்டு முஸ்லிம்களை போன்று அல்லது முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்து பதவிகளை பெற்றுக்கொண்டமை எல்லாம் எல்லாமே வியாபாரமாகத்தான் மாறியுள்ளது என தெரிவிக்கின்றார் முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்தீன்.


தொடர்ந்து தனது கருத்தினை பகிர்ந்து கொண்ட சேகு இஸ்ஸதீன்…..நான் முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் அஸ்ரபுடன் சேர்ந்து கட்சியை ஆரம்பிக்கின்ற பொழுது இப்பொழுது இருக்கின்ற கட்சி அல்ல அப்பொழுது இருந்தது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை அகற்றுவதை குறிக்கோள்ளாக கொண்டே நாங்கள் கட்சியினை ஆரம்பித்தோம். மர்ஹும் அஸ்ரப் 1992ம் ஆண்டு அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியில் இடம் பெற்ற கூட்டத்தில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாச மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என முஸ்லிம்கள் சார்பாகவும், முஸ்லிம்களின் கட்சிகள் சார்பாகவும் உரையாற்றினார். ஆனால் அன்று அஸ்ரப் அவ்வாறு தெரிவித்தானது முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியின் கொள்கை அல்லாது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும் என நான் உரையாற்றிய பொழுது கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டேன்.

முஸ்லிம்களின் உரிமைகளுக்கான குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக அன்று அக்கறைபற்றில் அலி உதுமான், சம்மாந்துறையில் மாகாண சபை உறுப்பினர் மன்சூர், பேறுவளையில் அப்துர் ரஃமான் போன்றவர்களை முஸ்லிம் காங்கிரஸ் உயிர்ப்பலி கொடுத்திருந்தது. எங்களுக்கு பாதுகாப்பிற்காக இருந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு பல தியாகங்களுக்கு மத்தியில் உறுவாக்கப்பட்ட இக்கட்சியானது இன்று அதிகாரத்தில் மோகம் ஏற்படத்தொடங்கி திசை மாறிக்கொண்டிருக்கின்றதை பார்க்கின்ற பொழுது எனக்கு அக்கட்சியின் மீது மீதமாய் எஞ்சியிருந்த நம்பிக்கையும், விருப்பமும் அற்றுப்போய் இன்று மண் சோற்றுப்பானைக்குள் இருக்கும் மண் சோற்றை போலவே அக்கட்சியில் இருப்பவர்களை பார்க்கின்றேன்.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு எதற்கு பிரயோசனமற்ற சுகபோக வாழ்க்கையினை அனுபவித்து கொண்டிருப்பவர்களிடம் முஸ்லிம்களின் உரிமைகள் வென்றெடுக்கபட வேண்டும் என்பதற்காகவோ.? அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன் முறைகளுக்கு எதிராகவோ தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கவுமில்லை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் அமர்த்தவுமில்லை. மாறாக அன்று றிசாட் பதுடீன் மஹிந்த ராஜபக்கவை விட்டு வெளியேறியதால் முஸ்லிம்கள் மத்தியில் றிசாட் பிரபல்யம் அடைந்துவிடுவார் என்பதற்காகவே மைத்திரியை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் இன்று ஐக்கிய தேசிய கட்சியினை விட்டு வெளியேறினால் கண்டி மாவட்டத்தில் தான் வெற்றியடைய முடியாது என்பதுவுமே முக்கிய கருப்பொருளாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் பார்க்கப்படுக்கின்றது.

இன்று முஸ்லிம் காங்கிரசின் நிலைமையினை பார்க்கின்ற பொழுது அதன் கொள்கையிலும், யாப்பிலும் என்ன எழுதப்பட்டுள்ளது.? என்பது கூட கட்சியின் தலைமைக்கோ, உறுப்பினர்களுக்கோ.? போராளிகளுக்கோ தெரியாது. இவ்வாறுதான் இன்று முஸ்லிம்களின் உரிமைகளுக்கான குரலாக அன்று எங்களுடைய மறக்க முடியாத பல உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் உறுவாகக்ப்பட்ட முஸ்லிம் காங்கிரசுடைய நிலைமை இருக்கின்றது. ஆகவே முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்படுமாயின் அந்த நேரத்தில் எனக்கு எது தோன்றுகின்றதோ.? அதனை எனது சமூகத்துக்காக செய்ய கடமைப்பட்டுள்ளேன் என முஸ்லிம் காங்கிரசுனுடைய இஸ்தாபக தலைவர்களில் முக்கியமானவரும் கட்சியின் மரச்சின்னத்தையும் அதற்கான நிரத்தையும் தெரிவு செய்தவரும், அக்கட்சியின் முதலாவது தவிசாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் மேற்கண்டவாறு தெரிவிக்கின்றார்.
மண்ணினால் சோறு சமைத்து விட்டு, அச்சோற்றில் மண்ணினை தேடுவதுதான் இன்றைய அரசியலில் முஸ்லிம் காங்கிரசின் நிலை. மண்ணினால் சோறு சமைத்து விட்டு, அச்சோற்றில் மண்ணினை தேடுவதுதான் இன்றைய அரசியலில் முஸ்லிம் காங்கிரசின் நிலை. Reviewed by Madawala News on July 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.