கிழக்கு மாகாண சம்பியன் ஆனது, பொத்துவில் தேசிய பாடசாலை.


கிழக்கு மாகாண சம்பியனானது பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)!
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டித் தொடரில் இறுதிப் போட்டியில் அக்/பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டு தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது.

இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) 06 ஓவர்கள்
முடிவில் 28 ஓட்டங்களை பெற்றதுடன் எதிர்த்தாடிய எமது பொத்துவில் மத்திய கல்லூரி 3.2 ஓவர்கள் முடிவில் 29 ஓட்டங்களை பெற்று 10 விக்கட்டுக்களால் பொத்துவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) வெற்றி பெற்றது.

இப்பேரடைவை ஏற்படுத்து கல்லூரியின் நாமத்தை மீண்டுமொரு தடவை கிழக்கு மண்ணெங்கும் ஒலிக்கச் செய்த வீரர்களுக்கு பொத்துவில் மண்ணும், மக்களும், பாடசாலை சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

பல போட்டிகளில் வெற்றிபெற்று கிழக்கு மண்ணின் சம்பியனாக தெரிவாகுவதற்கு அணிக்கு பயிற்சியளித்து தயார்படுத்திய ஆசிரியர் எம். எம். அஸ்மி அவர்களுக்கும், ஆலோசனை வழங்கி வழிகாட்டிய கல்லூரியின் முதல்வர் கே. ஹம்ஸா அவர்களுக்கும் பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர்கள் அளப்பறிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

-சல்மான் லாபீர்
கிழக்கு மாகாண சம்பியன் ஆனது, பொத்துவில் தேசிய பாடசாலை. கிழக்கு மாகாண சம்பியன் ஆனது, பொத்துவில் தேசிய பாடசாலை. Reviewed by Madawala News on July 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.