இந்தியாவை அதிரடியாக வீழ்த்தி, பைனலுக்கு சென்றது நியூசிலாந்து.


இந்தியாவை வீழ்த்தி, பைனலுக்கு சென்றது நியூசிலாந்து.
உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார். 240 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, 5 ரன்கள் எடுத்த நிலையில் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்தது. ரோகித் சர்மா, கோஹ்லி, கே.எல்.ராகுல் தலா 1 ரன்னில் அவுட் ஆகினர்.

தலா 32 ரன்கள் விளாசிய பன்ட், பாண்ட்யா பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து தோனியுடன் கூட்டணி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா 3 சிக்சர், 3 பவுண்டரி உதவியுடன் 38 பந்தில் அரைசதம் விளாசினார். ஜடேஜா, 59 பந்துகளில் 77 ரன்களுக்கு அவுட்டானார்.

அதனை அடுத்து தோனியும் அவுட் ஆக,  பிறகு வந்த பந்துவீச்சாளர்களும் ஆட்டமிழந்தனர்.

இதனை அடுத்து அனைத்து வீக்கட்டுகளையும் இழந்து  இந்தியா 221 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

அதிரடியாக வென்ற நியுசிலாந்து இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இந்தியாவை அதிரடியாக வீழ்த்தி, பைனலுக்கு சென்றது நியூசிலாந்து. இந்தியாவை அதிரடியாக  வீழ்த்தி, பைனலுக்கு சென்றது நியூசிலாந்து. Reviewed by Madawala News on July 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.