நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குகொண்ட ஶ்ரீலங்கா சுபர் சீரீஸ் மோட்டார் சைக்கில் ஓட்டப்பந்தயம்.. மடவளை முஷாரப் அசத்தல் வெற்றி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குகொண்ட ஶ்ரீலங்கா சுபர் சீரீஸ் மோட்டார் சைக்கில் ஓட்டப்பந்தயம்.. மடவளை முஷாரப் அசத்தல் வெற்றி.


இலங்கை மோட்டார் பந்தய ஓட்டுனர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 
ஆம் ஆண்டுக்கான ஶ்ரீலங்கா சுபர் சீரீஸ் மோட்டார் சைக்கில் ஓட்டப்பந்தயம் இன்று (14) மிரிகம மோட்டார் பந்தய திடலில் இடம்பெற்றது. 

நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குகொண்ட இப்போட்டியில் மடவளையை சேர்ந்த முஷர்ரfப் fபுவாட் 1000CC மற்றும் 600CC பிரிவுகளுக்கான போட்டிகளில் முறையே 2ஆம் மற்றும் 3 ஆம் இடங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 


1000 CC பிரிவுக்கான போட்டியில் மற்றைய அனைத்து வீரர்களும் 1000CC மோட்டார் சைக்கில் போட்டியிட்ட போதும் 850CC மோட்டார் சைக்கிலில் போட்டியிட்டு முஷர்ரfப் fபுவாட் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. 


பங்குகொண்ட முதல் தொடரிலேயே இப்படியான ஒரு வெற்றி கிடைத்ததையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக முஷர்ரfப் fபுவாட் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
– hazeem Mohamed Naleem _நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குகொண்ட ஶ்ரீலங்கா சுபர் சீரீஸ் மோட்டார் சைக்கில் ஓட்டப்பந்தயம்.. மடவளை முஷாரப் அசத்தல் வெற்றி. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குகொண்ட ஶ்ரீலங்கா சுபர் சீரீஸ் மோட்டார் சைக்கில் ஓட்டப்பந்தயம்.. மடவளை முஷாரப் அசத்தல் வெற்றி.  Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5