இலங்கை முஸ்லிம் சமூகம் மூடப்பட்ட சமூக நிலையிலிருந்து திறக்கப்பட்ட சமூக நிலைக்கு வரவேண்டும் .


- ஜே.எம்.ஹபீஸ்- 
முஸ்லிம்களது அன்றாட நடவடிக்கைகள் பல சவாலுக்கு உற்படுத்தப்பட்டுள்ள
இக்காலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் மூடப்பட்ட சமூக நிலையிலிருந்து திறக்கப்பட்ட சமூக நிலைக்கு வரவேண்டும் என்று அஷ்ஷேக் முனீர் முலப்பர் (நளீமி) தெரிவித்தார் (10.7.2019)


அக்குறணை பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் இணைந்து அக்குறணை அர்-ரஹ்மானியா மத்ரசாவில் (அரபிக் கல்லூரியில்) ஒழுங்கு செய்த கலாச்சார நல்லிணக்க சந்திப்பில் பிரதான பேச்சாளராகக் கலந்து உiராயற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.


அக்குறணை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க பிரிவுகளைச் சேர்ந்த பெருமளவு பொதுமக்கள் மற்றும் சமயத்தலைவர்கள் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என துறைசார் பிரிவினர் இதில் கலந்துகொண்டனர். இதில் சிங்கள மொழியில் அவர் உiராயற்றும் போது மேலும் தெரிவித்ததாவது-
இன்று முஸ்லிம்கள் பற்றி நிறைய விடயங்கள் பேசப்படுகின்றன.


விமர்சிக்கப்படுகின்ற பேசுபொருளாக உள்ளது. இந்நிலைக்கு  முஸ்லிம் சமூம் ஒரு மூடிய நிலையில் வாழ்ந்து வருவதும் ஒரு காரணமாகும். அதனை விடுத்து திறந்த ஒரு நிலைக்கு கொண்டு வரவேண்டும். அண்மையில் திறந்த பள்ளிகள் என்ற ஒரு எண்ணக்கரு முன்வைக்கப்பட்டு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பதை தெளிவு படுத்தியது போல் மத்ரசா என்றால் என்ன?


அதில் என்ன நடக்கிறது, அது ஏன் அவசியம் போன்ற பலதரப்பட்ட வினாக்களும் ஆதங்கங்களும் ஐயப்பாடுகளும் முஸ்லிம் அல்லாதவர் மத்தியில் பரவலாக உள்ளன. அதற்கு உரமூட்டும் வகையில் சில இனவாதிகள் தூபமிடுவதுடன் சில அமைப்புக்கள் அதனை விற்பனைப்பாண்டமாக்கி தொழிற்பட்டும் வருகின்றன.


இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் அண்மைய ஏப்ரல் குண்டு வெடிப்புச் சம்பவம் அமைந்து விட்டது. எனவே இவை பற்றி மற்றைய சமூகங்களுக்கு நாம் எடுத்துக்காட்டாத வரையில் அது பாரிய பின் விளைவுகளை தோற்று விக்கும். எனவே இப்படியான கலாச்சார நல்லிண சந்திப்புக்கள் ஊடாக அதனை நிவர்த்தி செய்தல் வேண்டும்.


முஸ்லிம்களின் உடை, மத்ரசா, மக்தப், ஹலால், குர்ஆன், பலதார திருமணம் போன்ற பல விடயங்கள் இன்று பேசு பொருளாக்கப்பட்டுள்ளன. இதனை விட முஸ்லிம்களது பள்ளிகளுக்குள் பிறருக்கு போக முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது. அவர்களது மொழி எமக்குப் புரியாது. அவர்கள் அராபிய கலாசாரத்தை மேம்படுத்து கிறார்கள் என்ற பல்வேறு சவால்கiளுக்கு எம்மை உற்படுத்தும் போது நாம் இன்னும் மூடிய சமூகம் என்ற நிலையில் இருப்பின் எம்மைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்ளும்வாய்ப்பு இல்லாது போகலாம். எனவே பள்ளிகளில் அல்லது மத்ரசாளில் அவர்களுக்கு வந்து பார்வையிட முடியும் என்ற திறந்த தன்மையை ஏற்படுத்த வேண்டும்.


மத்ரசா என்பது ஏதோ புதிதாக உருவான ஒன்றுதான் என்ற நிலையில் மத்ரசா பற்றிய எண்ணக்கருக்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியல் உள்ளது. 'மத்ரசா பாடசாலை' என்ற சொற்பிரயோகம் 'கெச் பிடித்தான், நடு சென்டர், கட் வெட்டினான்' போன்ற சொற்பிரயோகம் போன்றதாகும். கெச் என்பது பிடிதான், நடு என்பது சென்றர் தான், மத்ரசா என்பது அரபியில் பாடசாலை என்பது.
ஒரு முஸ்லிம் குழந்தை 7 வயதாகும் போது கட்டயமாக தொழ ஆரம்பிக்க வேண்டும். எனவே முன்பள்ளி கல்வி போன்று தற்போது மக்தப் என்றழைக்கப்படும் மத்ரசாக்கள் அல்லது பள்ளிக் கூடம் என்றும் அன்று கூறப்பட்ட தின்னைப்பள்ளிகள் அவசியதாகின்றன.தொழுகை பற்றிய விடயங்கள் அதனை பிரயோகிக்க அரபு மொழி என்பன தேவை. முன்னர் அவை முறைசார அமைப்பில் இருந்ததன. அண்மையில் அவை ஒரு முறைசார் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு முழு நாட்டிற்கும் ஒரே பாடத்திட்டம் வகுக்கப்பட்டு சீருடையும் வழங்கப்பட்டது.


அத்துடன் பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் வாரத்திற்கு 2 பாடவேளை போன்ற இஸ்லாமிய பாட அறிவு மேற்படி தேவையை பூத்ர்ரி செய்யப் போதியதாக இல்லை. இதுவே எமது மத்தரசாக்களின் உருவாக்கமாகும். அதன் ஒரு படித்தரமாக உயர் கல்வி போன்று மத்ரசாக்கள் சில உருவாக்கப்பட்டன.


தென் மாகாணத்தில் 140 வருடங்களுக்கு முன்பே பாரி மத்ரசா உருவாக்கப்பட்டுள்ளது. மத்ரசாக்களில் அரபு மட்டும் போதிக்கப்படுவது என்பது தவறு. மக்தப் என்ற ஆரம்ப மத்ரசாவின் நோக்கமே தொழுகைக்கு அடிப்படையான ஆரம்ப அரபு கல்வியை வழங்கு வது. அது வெறும் 2 மணி நேர வகுப்பு. அதில் 100 வீதம் அரபு சார்ந்த விடயங்கள் மற்றும் சமயம் சார்ந்த விடயங்கள் நடப்பதில் புதுமையில்லை. அதற்காகவே அது உருவாக்கப்பட்டது.


ஆனால் உயர் கல்வியை வழங்கும் மத்ரசாக்களில் பலவிடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று சிங்கள மொழியிலே நடைபெறும் மத்ரசாக்களும் உள்ளன. க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம் பரீட்சைகளில் தேர்சியடையும் மாணவர்கள் உருவாக்கப் படுகிறார்கள். இவை அனைத்தும் இன்று மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ள.

 மத்ரசாக்கள் நாட்டுக்குகந்த நற்பிரஜைகளை உருவாக்கும் பணியையே செய்கிறது. என்றார்.


இவ்வைபவத்தில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இப்திகார் இமாமுதீன், அளவதுகொடை பொலீஸ்;நிலைய பொலீஸ்பரிசோதகர் தென்னகோன், பாத்ததும்பறை சங்கநாயக்க தீகல சுமனஜோதி தேரர், மாத்தலையைச் சேர்ந்த வண.பிதா மோசஸ், திரு கனேஷமூர்த்தி உற்பட இன்னும் பலர் உரையாற்றினர்.     
இலங்கை முஸ்லிம் சமூகம் மூடப்பட்ட சமூக நிலையிலிருந்து திறக்கப்பட்ட சமூக நிலைக்கு வரவேண்டும் . இலங்கை முஸ்லிம் சமூகம் மூடப்பட்ட சமூக நிலையிலிருந்து திறக்கப்பட்ட சமூக நிலைக்கு வரவேண்டும் . Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5