இலங்கையில் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டது.

இலங்கையில் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார்.

புதிய வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த வரைபட தயாரிப்பு பணி மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது தற்போது அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய வரைபடத்தில், துறைமுக நகரம் உள்ளிட்ட 25 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து மாற்றங்களும் உங்வாங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இறுதியாக இலங்கையில் வரைபடம், 1995ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டில் இருந்து வரைபடத்தை புதுப்பிக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டது. இலங்கையில் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on July 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.