ஹரீஸ் எம்.பி மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும் – பிரபல நடிகர் வேண்டுகோள்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி
எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி அவர்கள் அமைச்சர் பதவியை மீண்டும் பொறுப்பேற்பதில்லை என்றும் காலம் தாமத்தித்து பதவியை  பொறுப்பேற்பது என்றும் பரவலாக கதைகள் உலாவரும் இவ்வேளையில் ஹரீஸ் எம்.பி அவர்கள் பதவி விலகுவதால் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டு விடும் என்றும்  மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை,சாய்ந்தமருது முஸ்லிம் மக்களுக்கும் கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் எழுத்தாளரும் நடிகருமான ஜெயபாலன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள்.
.
மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.
.
ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்சிகளுடனும் பேசி கட்சியை முஸ்லிம் கூட்டமைப்பாக மேம்படுத்த உழையுங்கள். இது உங்கள் கடமை.
.
கல்முனைத் தாயின் மூன்று பிள்ளைகளான கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம்களுடனும் கல்முனை வடக்கு தமிழர்களுடனும் சமரசம் செய்துகொள்ளுங்கள். அனைச்சராகி கல்முனையின் மூன்று சகோதரகளுக்கும் நற்பணி ஆற்றுங்கள். முஸ்லிம்களின் கனவான தென்கிழக்கு கரையோர மாகாணத்துக்கான போராட்டத்தை முன்னெடுங்கள். நாங்களும் தமிழர்களை திரட்டி துணை வருகிறோம். இதுதானே உங்கள் கனவு.
.
நீங்கள் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனையின் மூன்று சகோதரர்களுக்கு வாழ்வால் இணைந்த பணிவன்புடன் கோருகிறேன். என தெரிவித்துள்ளார்.

(நூருல் ஹுதா உமர் ) 
ஹரீஸ் எம்.பி மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும் – பிரபல நடிகர் வேண்டுகோள். ஹரீஸ் எம்.பி மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும் – பிரபல நடிகர் வேண்டுகோள். Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5