ஹரீசுடைய முடிவுகளிலே முஸ்லிம் காங்கிரசின் எதிர்காலம் தங்கியுள்ளது...!!


- oddmavadi ahmed irshad -
மு கா பிரதிநிதிகள் அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்பதை பெருவாரியான கட்சிப் போராளிகளும்
பொதுமக்களும் ஏற்ற்க்கொள்வார்களா.? .அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதால் சமூகத்துக்கு பெரிதாக எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்ற பார்வையில் அடுத்த தேர்தல்வரை பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாது இருப்பதே சிறந்தது என்ற கருத்துக்களுக்கு முஸ்லிம் காங்கிரசின் அரசியல் தலைமைகள் முக்கியதுவம் கொடுப்பார்களா.?

அமைச்சுப்பதவியை பெற்றுக் கொள்வதால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமாக இருந்தால் நிச்சயம் அமைச்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்
என்ற நிலைப்பாட்டில் சமாகாலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பல தூர நோக்கு சிந்தனையுடனான அரசியல் கருத்துக்களை தெர்விக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசினுடைய முடிவு என்ன.? கட்சியைம் ,கட்சியின் தலைமையும் தூக்கி நிறுத்திய சந்தர்ப்பங்கள் ஹரிசுடைய அரசியல் வாழ்க்கையில் பல தடைவைகள் இடம் பெற்றுள்ளது என்பதும் உண்மையே.

முஸ்லிம் காங்கிரசின் தாயகமான கல்முனைகுடி சமூகத்தின் மத்தியில் தற்பொழுது ஹரிஸ் எனும் அரசியல் தலைமை பேசப்பட்டு வருகின்ற நிலையில் அவர் எடுக்கப்போகின்ற ஒவ்வொரு முடிவுகளும் சமூகத்தின் மத்தியிலும், தேசிய அரசியலிலும், கட்சி சார்பாகவும், அவருடைய எதிர்கால அரசியல் இஸ்தீர தன்மையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பது மட்டும் தெளிவுடையதாக இருக்கின்றது.

பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபிற்கு பிற்பாடு எந்தக்கட்சியாக இருந்தாலும் அமைச்சுப்பொருப்புக்களை பெற்று முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத, வென்றெடுக்கப்படாத உரிமைகளை பெற்றுக்கொள்வதர்கு நியாயமான நடவடிக்கைகளை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா.? என்ற மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மீள் எழுச்சியில் கிடைத்துள்ள முழுமையான தற்பொழுது தெளிவில் தற்பொழுது மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பெடுப்பது என்பது மக்கள் மத்தியில் எந்தளவிற்கான வர வேற்பினை கொடுக்கும் என்பதே மிகப்பெரிய கேள்வி…..
ஹரீசுடைய முடிவுகளிலே முஸ்லிம் காங்கிரசின் எதிர்காலம் தங்கியுள்ளது...!! ஹரீசுடைய முடிவுகளிலே முஸ்லிம் காங்கிரசின் எதிர்காலம் தங்கியுள்ளது...!! Reviewed by Madawala News on July 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.