ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களேஇராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பௌத்த தேரர்கள் தொடர்பில் வெளியிட்ட
கருத்துக்கு மகா சங்கத்தினரிடம் பொது மன்னிப்புக் கோருவதற்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்குவதாக சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மடில்லே பஞ்ஞாலோக தேரர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளத்தில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தொடர்பில் நேற்று (14) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துவிட்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே Reviewed by Madawala News on July 15, 2019 Rating: 5