மிகத்தெளிவான சஹ்ரானிய தீவிரவாதத்தை இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.,"



கடந்த ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்களை மையப்படுத்திய விசாரணைகளும், கைதுகளும்,
விடுதலைகளும், பாராளுமன்றம் விவாதங்களும், அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுக்களும் என்று பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதங்களை காரணம் காட்டி திணிப்புச் செய்வதனை யதார்த்த பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இச் சஹ்ரானிய தீவிரவாத செயற்பாடுகளுக்கு ISIS வெளிப்படையாக உரிமை கோரியுள்ள நிலையிலும், மறைமுக ஒத்துழைப்புக்கள் என்ற ரீதியில் அரச தரப்பிலுள்ள பலர் குற்றம்சாட்டப்பட்டும் சிலர் கைதாகியும் இருக்கின்ற போது வேண்டுமென்றே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கேலிசெய்வதும், குறைகூறுவதும் மத சமத்துவங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.

சஹ்ரானிய தீவிரத்தைக் காரணம் காட்டி இலங்கையில் கேள்விக்குற்படுத்தப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத விடயங்களாக,

1. பெண்களின் ஆடை

2. பள்ளிவாயல்கள், குர்ஆன் மத்ரஸாக்களுடன் தொடர்பான சில செயற்பாடுகள்.

3. அரபு எழுத்துக்கள்.

4. இஸ்லாமிய சட்டங்கள் (திருமணம், விவாக விவாகரத்து)

என்ற பல விடயங்களை அடையாளப்படுத்தலாம். அனால் உண்மையில் குறிப்பிட்ட விடயங்களுக்கும் நடைபெற்ற தாக்குதல்களுக்கு தொடர்பு இருந்திருக்க முடியாது என்கின்ற போது மீண்டும் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைகளை கேள்விக்குற்படுத்துவது மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியதாகும்.

அடிப்படைவாதம் என்றால் "ஒரு குறித்த மதத்தின் வழிப்படுத்தலுக்கும் பின்பற்றல்களுக்குமான அவசியமான காரணிகள்" என்ற நாம் வரைவிலக்கணப்படுத்துகின்றோம் என்ற நிலையில் எல்லா மதக் கோட்பாடுகளும் ஏதோவோர் அடிப்படைவாதத்தை அடியொற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதனை புரிந்து கொள்ளவும் கடமைப்பட்டுள்ளோம்.

(MLM. சுஹைல்)
மிகத்தெளிவான சஹ்ரானிய தீவிரவாதத்தை இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.," மிகத்தெளிவான சஹ்ரானிய தீவிரவாதத்தை இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.," Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.