மனச்சாட்சியோடு பேசுகிறேன்..! - Madawala News Number 1 Tamil website from Srilanka

மனச்சாட்சியோடு பேசுகிறேன்..!JVP கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நூறு வீதம் உண்மையானது. இதற்கு
ஆதரவாக வாக்களிக்கவே எனது மனச்சாட்சி சொல்லுகிறது. ஆனால் ரஹுப் ஹக்கீம் அவர்கள் இந்த ஆட்சி முடியும்வரை இந்த ஆட்சியை வீழ்த்தமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்ததன் காரணமாக என்னால் எதிர்த்து வாக்களிக்க முடியாதுள்ளது என்று மு.அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் கூறுகின்றார்...!

இப்படித்தானே மத்திய வங்கி கொள்ளை சம்பந்தமாக ரணில் அரசாங்கத்துக்கு எதிராக வந்த பிரேரணைக்கும் மனச்சாட்சிக்கு எதிராக வாக்களித்தீர்கள்.  அதேபோன்று மா.சபை.தே. திருத்தச்சட்டம் வந்தபோதும் மனச்சாட்சிக்கு எதிராக செயல்பட்டீர்கள். இதுவெல்லாம் உங்களுக்கு கறுப்பு புள்ளியாக மாறியவிடயத்தை நீங்கள் கவணிக்கத் தவறிவிட்டீர்கள்.  நீங்கள் மாற்றுத் தலைமையாக வருவீர்கள் என்று நம்பினோம். நீங்கள் ஒவ்வொரு இக்கட்டான நிலைமையின் போதும் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை இழந்து,  ஹக்கீம் அவர்களின் பின்னால் சென்றதினால் ஏற்பட்ட வடுக்கள்தான் இன்று உங்களை இப்படி பாதித்திருக்கின்றது என்பதை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள்...!

Jvp சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் ரணில் அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்று சொன்னால் அதன் அர்த்தமும், அந்த சதிக்கு பின்னால் இருக்கும் விபரீதங்களும் என்னவென்பது புரிந்தவர்களுக்கு புரியும். நடந்து முடிந்த பயங்காரவாதத்தை உரிய நேரத்தில் அடக்காததற்கும், நடந்த கலவரங்களை அரசாங்கம் என்ற முறையில் அடக்காததற்கும் ரணில் அரசாங்கமே பொறுப்பு என்று கூறும் விடயத்தின் உண்மைத்தண்மையை அறிந்த நீங்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தால் இறைவனிடம் நிச்சயமாக பதில்கூறியே ஆகவேண்டும். 

இந்தப்பிரச்சினைக்கு உரிய நேரத்தில் ரணில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம் சமூகம் இந்தளவு தலைகுணிந்து நிற்பது மட்டுமல்ல  பெரும் இழப்புக்களையும் சந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கெல்லாம் காரணம் ரணில் அரசாங்கமே என்று jvp சொல்வதை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும்  நீங்கள் அதற்கு விரோதமாக செயல்பட்டால் அதற்கு நீங்கள் இறைவனிடம் பதில் கூறியேயாகவேண்டும்.

ஆகவே ரணில் அரசாங்கத்திடம் வசமாக மாட்டிக்கொண்டு தவிக்கின்றீர்கள் என்பதை கடந்தகால செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகின்றீர்கள். வானமே இடிந்து விழுந்தாலும் மனச்சாட்சிக்கு விரோதாக ஒரு தலைவன் இயங்குவானாக இருந்தால், அதன் காரணமாக பல இன்னல்களை சந்திக்கவேண்டிவரும் என்பது வரலாறு. 

ஆகவே உண்மையை உரத்துக்கூறும் பலக்கமுடைய நீங்கள், அதே உண்மைக்கு எதிராகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாக்களித்து வருகின்றீர்கள். இந்த விடயமே உங்களை ஆட்டிப்படைக்கின்றது என்பதுதான் எங்களின் தாழ்மையான கருத்தாகும்.

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
மனச்சாட்சியோடு பேசுகிறேன்..! மனச்சாட்சியோடு பேசுகிறேன்..! Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5