சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தின் உயர் பதவிக்கு ஒரு மல்வானை மைந்தன்!


மல்வானையை சேர்ந்த சகோதரன் பாசில் பாருக் (நளீமி) அவர்கள் ரியாத் நகரில் உள்ள சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் உயர் பதவியான Third Secretary (மூன்றாவது செயலாளர்) பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப் பதவியைப் பொறுப்பேற்க இன்று(13) அவர் சவூதி அரேபியா நோக்கி புறப்பட்டார்.

கடந்த வருடம் இலங்கை வெளிநாட்டு சேவைகள்(SLFS) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சில் பணியாற்றி வந்த இவர் இன்று முதல் சவூதி அரேபிய இலங்கை தூதரகத்தில் தொடர்ந்து பணியாற்றவுள்ளார்.

எமது மல்வானைக்கு பல பெருமைகளைத் தேடித் தந்த இவர் அண்மையில் முதுமாணி (M.A) பட்டம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் மல்வானை, உளஹிட்டிவலையைச் சேர்ந்த மொஹமட் பாருக், சித்தி மதீனா ஆகியோரின் புதல்வன் என்பதோடு,

மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை(O/L Batch 2004) மற்றும் 
பேருவளை ஜாமியா நளீமியா கலாசாலையின் முன்னாள் மாணவனுமாவார்.

பாசில் பாருக்(நளீமி) அவர்கள் மல்வானைக்கு பெருமை தேடித் தந்தது போல் எதிர்வரும் காலங்களில் எமது முஸ்லிம் சமூகத்தையும் பெருமைப்படுத்த எமது வாழ்த்துக்கள்!!!

இன்ஷாத்   –மல்வானை
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தின் உயர் பதவிக்கு ஒரு மல்வானை மைந்தன்!  சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தின் உயர் பதவிக்கு ஒரு மல்வானை மைந்தன்! Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5