நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பாதாள உலக குழு உறுப்பினா் கைது

நீண்ட காலமாக காவல் துறையால் தேடப்பட்டு வந்த பாதாள உலக குழு உறுப்பினா் ஒருவர் திஸ்ஸமஹாராம - வீரவில - குடாகம்மான பகுதியில் வீடொன்றில் தலைமறைவாக இருந்த நிலையில் காவல் துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து ஒன்பது மில்லிமீட்டர் வகையை சேர்ந்த துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

குறித்த நபர் 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் மூன்று கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இவர் இன்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பாதாள உலக குழு உறுப்பினா் கைது நீண்ட காலமாக  தேடப்பட்டு வந்த பாதாள உலக குழு உறுப்பினா் கைது Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5