ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது - ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடிஎம்.மனோசித்ரா
உயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழுவில் முன்னெடுக்கப்படும்
விசாரணைகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் பதவியேற்க தீர்மானித்தால் அதற்கு எதிராக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். 

கூட்டாக அமைச்சுப்பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் பதவியேற்றக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர். 

எனினும் ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சு பதவியேற்பதில் ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை எம்.பிக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது - ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது  -  ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5