கல்முனையை காட்டிக்கொடுப்பதே ஹக்கீம்தான் என்பதை எத்தனைபேர் ஒத்துக்கொள்வீர்கள்..?

கல்முனையின் உப செயலக விவகாரத்தில் ரணில் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்
என்பது 11ம் திகதி மனோ கூறிய எதிர்வு கூறலிலேயே விளங்கிவிட்டது. அந்த விடயம் சத்தியமாக நிச்சயமாக ஹக்கீம் அவர்களுக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்பதே உண்மையாகும்.  அதனை நன்றாகவே மூடிமறைத்து நாடகமாடியுள்ளார் என்பதை கல்முனை புத்திஜீவிகள் இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை என்பதே மனவேதனையான விடயமாகும்.


m

சிலகாலங்களுக்கு முன் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணிலின் சம்மதத்தோடு சமர்த்திருந்த விடயத்தை நாம் அறிந்திருக்கின்றோம். அந்த சம்பவத்தை ஏதேச்சையாக கேள்விப்பட்ட எம்பி ஹரீஸ் அவர்கள் தலைவர் ஹக்கீமிடம் போய் இதனை நீங்கள் அறியவில்லையா? என்று கேட்டபோது, 'விரல் சூப்பும் பாலகனைப்போன்று'  எனக்கு தெரியாதே என்று கூறியவர், வாருங்கள் பிரதமரிடம் போய் கதைப்போம் என்று அழைத்துச் சென்று அந்த விபரீதத்தை தடுத்த விடயத்தையும் நாம் மறந்திருக்கமாட்டோம். 

(அன்று இந்த விடயத்தினை ஹரீஸ் எம்பி அவர்கள் அறிந்திராது விட்டிருந்தால் அன்றே உப செயலகம் தரம் உயர்த்தப்பட்டு, கல்முனை என்ற முஸ்லிம்களின் நகரமும் பறிபோயிருக்கும். அதன் பிறகு ஹக்கீம் கூறுவார்.. (மாயக்கல்லில் வைக்கப்பட்ட சிலையை அகற்றியது போன்று இதனையும் பிரதமர் ரணிலிடம் எடுத்துக்கூறி அகற்றி தறுகிறேன் பொறுமையாக இருங்கள் என்பார். *இதனை மாற்றி யோசியுங்கள்.). அதோடு கதை முடிந்துவிடும்.)

ஆனால் அமைச்சரவை பத்திர விடயம் முன்னமே எல்லா கெபினட் மந்திரிகளுக்கும் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதே உண்மையாகும். இதனை ஹக்கீமோ அல்லது ரிசாட்டோ அறிந்தும் அறியாதவர்கள்போல் சும்மா இருந்துவிட்டார்கள் என்பதற்கு ஆதாரம், அதே அமைச்சரவையில் அங்கத்தவராக இருந்த மனோ கணேசனுக்கு இந்த விடயம் தெரிந்திருந்ததாகும். காதும் காதும் வைத்தாற்போல் கல்முனைக்கு ஆட்டையைபோட அனுமதித்த இந்த நயவஞ்சகர்கள் எதுவும் தெரியாத "வபாபோல்" இருந்துவிட்டார்கள் என்பதே உண்மை.

அதன் பிறகு அமைச்சரவை பத்திரத்தில்  கல்முனை விடயம் நீக்கப்பட்டு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டதை அறிந்த மனோ கணேசன் அவர்கள்  கல்முனையில் உள்ள தமிழ் தரப்பாருக்கு விடயத்தை எடுத்துக்கூற, அவர்கள் அவசர அவசரமாக  கொழும்பு சென்று ஜனாதிபதி பிரதமர் போன்றோரை சந்தித்து ஒப்பாரி வைத்தவிடயங்களையும் நாம் அறிவோம். இப்படியான சம்பவங்களை நாம் அலசிஆராய்ந்து பார்ப்போமேயானால், கல்முனை விடயத்தில் ஹக்கீம் "நக்குண்டார் நிவிழந்தார்" என்ற நிலைபாட்டிலேதான் இருக்கின்றார் என்பது தெளிவாகும்.

அதனை காரணமாக வைத்துத்தான் கல்முனை விடயத்தில் ஹரீஸ் எம்பி மட்டும்தான் தடையாக இருக்கின்றார். மற்றவர்கள் இதற்கு தடையில்லை என்று தமிழ் தரப்பினர் பகிரங்கமாகவே கூறிவருவதை நாம் அவதானித்து வருகின்றோம். அதற்கு காரணம் கல்முனை முஸ்லிம் மக்களின் "மெயின் சுவிட்சாகிய" ஹக்கீமானவர் இதற்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்துள்ளார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

ஆகவே கல்முனைவிடயத்தில் தலைவர் ஹக்கீம் எந்தவிதமான கரிசனையோ கவலையோ  கொள்ளவில்லை என்பதோடு சம்பந்தன் ஐயாவின் அன்பும், ரணில் ஐயாவின் பண்பும் எனக்கு கிடைத்தால் அதுவே போதும் என்றபாணியில் அவர் செயல்பட்டு வருகின்றார் என்பதை முஸ்லிம் மக்கள் குறிப்பாக கல்முனை வாழ் மக்கள் கவணிக்க தவறியே வருகின்றார்கள் என்பதே யதார்த்தமானதாகும். இதன் விளைவுகள்தான் இன்று கொஞ்சம் கொஞ்சமாக கல்முனை என்ற முஸ்லிம்களின் இதயம் செயல்யிழந்து வருகின்றது என்பதே உண்மையிலும் உண்மையாகும்.

அரசியல் ஜாம்பவாங்களான எம்.எஸ் காரியப்பர், எம்.சி.அகமட், ஏ.ஆர்.மன்சூர்,  எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இந்த கல்முனை நகரத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியை எங்கோ உள்ள ஒரு ஹக்கீமிடம் ஒப்படைத்தன் விளைவுகள்தான் இதற்கு காரணம் என்பதை கல்முனைவாழ் மக்கள் புரிந்துகொள்ளாதவரை கல்முனையின் எதிர்காலம் என்பது இருள் சூழ்ந்ததாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது என்பதே உண்மையாகும்.

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
கல்முனையை காட்டிக்கொடுப்பதே ஹக்கீம்தான் என்பதை எத்தனைபேர் ஒத்துக்கொள்வீர்கள்..? கல்முனையை காட்டிக்கொடுப்பதே ஹக்கீம்தான் என்பதை எத்தனைபேர் ஒத்துக்கொள்வீர்கள்..? Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.