ஷியாமுக்கும் அவரது மனைவிக்கும் மரண தண்டனை நிச்சயம் . மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டு, குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட

மொஹமட் ஷியாமுக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (04) உறுதிப்படுத்தியது.

2003ஆம் ஆண்டில், கொழும்பின் - வார்ட் பிளேஸில் உள்ள ஒரு வீட்டில், 23 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில், மொஹமட் ஷியாமும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைடுத்து இடம்பெற்ற விசாரணைகளின்போது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், 2007ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றத்தால் அவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அவ்விருவரதும் சட்டத்தரணிகளால், மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பான தீர்ப்பை நேற்று வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அவர்களுக்கு விதித்திருந்த மரண தண்டனைத் தீர்ப்பை உறுதி செய்தது.
ஷியாமுக்கும் அவரது மனைவிக்கும் மரண தண்டனை நிச்சயம் . மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. ஷியாமுக்கும் அவரது மனைவிக்கும்  மரண தண்டனை நிச்சயம் . மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. Reviewed by Madawala News on July 05, 2019 Rating: 5