வெளிநாட்டவர்கள் இருவர் திருகோணமலையில் மரணம்.


-எப்.முபாரக் -
திருகோணமலைக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டவர்கள்
இருவர் புதன்கிழமை(10)உயிரிழந்துள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Gas aegean என்ற கப்பலில் வருகை தந்தவர்களே இவ்வாறு இறந்துள்ளனர்.

குறித்த கப்பல் காலியிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற வேளையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்த வெளிநாட்டவர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டினைச் சேர்ந்த பொறியியலாளர் மற்றும் இயந்திரவியலாளர் என தெரியவருகின்றது.

வெளிநாட்டவர்கள் இருவரும் இறந்தமைக்கான காரணம் தெரியவில்லையெனவும்,
சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் துதூவராலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார், துறைமுக அதிகார சபையினர், சுங்க திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படையினர், மரணவிசாரணை அதிகாரிகள் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டவர்களின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டவர்கள் இருவர் திருகோணமலையில் மரணம். வெளிநாட்டவர்கள் இருவர் திருகோணமலையில் மரணம். Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5