முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானம்இராஜினாமா செய்த முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானித்துள்ளனர்.


பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் இன்றைய தினம் இந்த கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
News first-
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானம் Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5