புர்கா, நிகாபை நிர‌ந்த‌ர‌மாக‌ த‌டை செய்ய‌ முன்வைக்க‌ப்ப‌டும் அமைச்ச‌ர‌வை ப‌த்திர‌ம் க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து




புர்கா, நிகாப், அபாயா என்றால் என்ன‌வென்றே தெரியாத‌ ம‌க்க‌ள் வாழும் ந‌ம் நாட்டில் 98 வீத‌ முஸ்லிம்க‌ளின்
வாக்குக‌ளால் வ‌ந்த‌ ஐ தே க‌ அர‌சின் அமைச்ச‌ர‌வை புர்கா, நிகாபை நிர‌ந்த‌ர‌மாக‌ த‌டை செய்ய‌ முன்வைக்க‌ப்ப‌டும் அமைச்ச‌ர‌வை ப‌த்திர‌ம் க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்றாகும். என இலங்கை முஸ்லிம் உலமா கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் அந்த அறிக்கையில், 

ஈஸ்ட‌ர் தின‌ தீவிர‌வாத‌ தாக்குத‌லுக்கும் பெண்க‌ள் த‌ம் முக‌ம் மூடுவ‌த‌ற்கும் எந்த‌ தொட‌ர்பும் இல்லை என்ப‌தை முழு நாடும் அறியும்.

எம்மை பொறுத்த‌வ‌ரை நாம் முஸ்லிம் பெண்க‌ள் முக‌ம் மூடுவ‌த‌ற்கு எதிரான‌வ‌ர்க‌ள். ஆனால் அத‌னை த‌விர்க்க‌ச் சொல்லும் அதிகார‌ம் உல‌மாக்க‌ளுக்கே உண்டே த‌விர‌ அர‌சாங்க‌ம் இதில் ச‌ட்ட‌மிய‌ற்றுவ‌து இன‌வாத‌மாகும் என்ப‌தே எம‌து க‌ருத்தாகும்.

இவ்வாறு புர்கா, நிகாப் என்ற‌ அர‌பு வ‌ச‌ன‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி இவ‌ற்றை த‌டை செய்யும் போது எது த‌டை என்று புரியாம‌ல் அபாவை அணிவ‌தற்கும் த‌லை மூடுவ‌தற்கும் எதிர்ப்புக்க‌ள் உரிவான‌தை நாம் நாட்டில் க‌ண்டோம்.

இந்த‌ நாட்டை இப்போது ஆள்வ‌து த‌னிப்ப‌ட‌ ஐ தே க‌வின் அமைச்ச‌ர்க‌ளைக்கொண்ட‌ அமைச்ச‌ர‌வையாகும். அந்த‌ அமைச்ச‌ர‌வையில் இவ்வாறு முஸ்லிம் பெண்க‌ளை அவ‌ம‌திக்கும் வ‌கையில் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ருவ‌து ஐ தே க‌ அர‌சுக்கு ஓட்டுப்போட்ட‌ முழு முஸ்லிம்க‌ளையும் அவ‌ம‌திப்ப‌தாகும்.

க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ அர‌சு முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌து என‌ ப‌ர‌வ‌லாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து. ஆனால் அந்த‌ அர‌சில் கூட‌ முஸ்லிம்களை ம‌ட்டும் குறிவைத்து இத்த‌கைய‌ ச‌ட்ட‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ப்ப‌ட‌வில்லை.

ஆக‌வே ஐ தே க‌ அமைச்ச‌ர‌வையின் இந்த‌ முய‌ற்சியை முழு முஸ்லிம்க‌ளும், பெண் உரிமை அமைப்புக்க‌ளும் க‌ண்டிக்க‌ முன் வ‌ர‌ வேண்டும் என முஸ்லிம் உல‌மா க‌ட்சி தலைவர் கலாநிதி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நூருள் ஹுதா உமர்)
புர்கா, நிகாபை நிர‌ந்த‌ர‌மாக‌ த‌டை செய்ய‌ முன்வைக்க‌ப்ப‌டும் அமைச்ச‌ர‌வை ப‌த்திர‌ம் க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து புர்கா, நிகாபை நிர‌ந்த‌ர‌மாக‌ த‌டை செய்ய‌ முன்வைக்க‌ப்ப‌டும் அமைச்ச‌ர‌வை ப‌த்திர‌ம் க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து Reviewed by Madawala News on July 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.