கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரம் ; தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரதமர் வாக்குறுதி..கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் நியமன கடிதம் வக்களிக்க முன்னர் வழங்கப்பட்டது
என தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட எம் பி சார்ள்ஸ் நிர்மலனநாதன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் கூறியுள்ளதாவது,

நாம் நம்பிக்கையில்லா பிரேராணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க முன்னதாக தீர்மானித்து இருந்தோம்.ஆனால் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு வாக்குறுதிகள் எமக்கு வழங்கப்பட்டன.கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் நியமன கடித பிரதி எமக்கு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான  காணி அதிகாரம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படும் என பிரதமர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாக்குறுதி அளித்ததாக கூறியுள்ள அவர் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற கூட்டத்திலேயே பிரதமர் இதனை தெரிவித்தாக கூறியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரம் ; தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரதமர் வாக்குறுதி.. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரம்  ; தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரதமர் வாக்குறுதி.. Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5