தங்க விருதினை பெற்றுக்கொண்ட அமைச்சு .


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி
மற்றும் மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சு பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் மதிப்பீட்டு திட்டத்தில் உயர் மட்ட செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் 2017ம் நிதி ஆண்டிற்காக தங்க விருதினை பெற்றுக்கொண்டுள்ளது.

உற்பத்திதிறன் மற்றும் செயற்திறன் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை பின்பற்றல் பொதுநிதியை சிக்கனமாக பயன்படுத்தல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை சிறந்தமுறையில் கடைப்பிடிப்பதன் அடிப்படையில் இவ் விருது வழங்கப்படுகின்றது

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் அவர்கள் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களிடமிருந்து இவ் விருதினை பெற்றுக்கொண்டார் குறித்த நிகழ்வானது 5ம் திகதி யூலை மாதம் 2019ம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அத்துடன் 2016ம் நிதி ஆண்டிற்காக கிழக்கு மாகாண விவசாய அமைச்சு வெள்ளி விருதினை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
தங்க விருதினை பெற்றுக்கொண்ட அமைச்சு . தங்க விருதினை பெற்றுக்கொண்ட அமைச்சு . Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5