இந்த அரசாங்கம் பெற்றிருந்த வெளிநாட்டு கடனில், 70 சதவீதமான கடன் திருப்பி செலுத்தப்பட்டு விட்டது.


சமகால அரசாங்கம் பெற்றிருந்த வெளிநாட்டு கடனில், 70 சதவீதமான கடன் திருப்பி செலுத்தியிருப்பதாக,
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய அவர், திருப்பி செலுத்தப்பட்ட இந்த தொகை 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு போதுமான நிதியை தம்மால் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர்,  இதேபோன்று மேலும் பெரும் தொகையை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

எதிர்வரும் வாரங்களில் இவற்றை செலுத்தக்கூடியதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டதுடன், அடுத்த வார நடுப்பகுதியில் இத் தொகை செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிடம் தற்போது 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய இருப்பு இருப்பதாகவும் நாட்டின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக இவை அமைந்துள்ளதாகவும் தற்போது நாட்டில் கடனுக்கான வட்டிவீதம் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் பெற்றிருந்த வெளிநாட்டு கடனில், 70 சதவீதமான கடன் திருப்பி செலுத்தப்பட்டு விட்டது. இந்த  அரசாங்கம் பெற்றிருந்த வெளிநாட்டு கடனில், 70 சதவீதமான கடன் திருப்பி செலுத்தப்பட்டு விட்டது. Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.