பெண்களை பார்த்து விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு 6 மாத சிறை & 9,750 டொலர் தண்டப்பணம்.

 
பெண்களை பார்த்து  விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பொது இடங்­களில் மேற்­கொள்­ளப்­படும்
ஏனைய பாலியல் ரீதி­யான தொந்­த­ரவு நட­வ­டிக்­கை­களை குற்­றச்­செ­ய­ல்களாகக் கருதும்  புதிய சட்­ட­மொன்றை பிலிப்பைன்ஸ்  ஜனாதிபதி ரொட்­றிக்கோ டுதெர்ட்   நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மேற்­படி சட்­டத்தின் பிர­காரம் கைது­ செய்­யப்­ப­டு­ப­வர்கள்  6 மாதங்க­ளுக்கு மேலான சிறைத்­தண்­டனை மற்றும் 500,000 பெஸோ (9,750 டொலர்) வரை­யான தண்டப் பண விதிப்­பையும் எதிர்­கொள்ள நேரிடும்.

இந்தச் சட்டம்  தொடர்­பான ஆவ­ணத்தில் ஜனா­தி­பதி கடந்த ஏப்ரல் மாதம் கைச்­சாத்­திட்­டி­ருந்த போதும் அது தொடர்பில் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழ­மையே  அறி­விப்புச் செய்­துள்­ளனர்.

புதிய சட்­டத்தின் பிர­காரம்  வீதிகள், பணி­யி­டங்கள். பொது வாக­னங்கள் உள்­ள­டங்­க­லான பொது இடங்­களில்  பாலின அடிப்­ப­டை­யி­லான பாலியல் தொந்­த­ர­வு­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உண­வ­கங்கள் மற்றும் திரை­ய­ரங்­குகள் என்­பன உள்­ள­டங்­க­லாக பொது­மக்கள் கூடும்  இடங்­களில் இந்தச் சட்டம் தொடர்­பான எச்­ச­ரிக்­கை­களைக் காட்­சிப்­ப­டுத்தக் கோரப்­பட்­டுள்­ளது.

எனினும் இந்தச் சட்டம் குறித்து பெண்கள் உரிமைகள் தொடர்­பான அமைப்­பொன்று கூறு­கையில், ரொட்­றிக்கோ டுதெர்ட்  தானே அந்தச் சட்­டத்தை மீறும் ஒரு­வ­ராக உள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்­ளது.

ரொட்­றிக்கோ டுதெர்ட் பொது இடத்தில் உரை­யாற்­று­கையில், பெண்­களை பாலியல் ரீதியில் அவதூறு செய்யும் விமர்சனங்களை  வெளியிட்டு  பல தட வைகள் சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களை பார்த்து விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு 6 மாத சிறை & 9,750 டொலர் தண்டப்பணம். பெண்களை பார்த்து விசி­ல­டித்தல், ஏளனம் செய்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு   6 மாத சிறை & 9,750 டொலர் தண்டப்பணம். Reviewed by Madawala News on July 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.