கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 1 இலட்சம் பேர் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம்,


இந்தாண்டு முதல் 6 மாத காலப்பகுதிக்குள் 95,908 பேர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும்
இதில் 56,526 பேர் ஆண்களென்றும் இவர்களுள் 16, 626 பேர் கட்டாருக்கு பயணமாகியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 39,382 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனரென்றும் இதில் அதிகமாக, 14,948 பேர் குவைட்டுக்குச் சென்றுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  வௌிநாடுகளில் உள்ள தூதரங்களின் தொழிலாளர் பிரிவின் கீழ் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதில் அதிகமானோர் குவைட் தூதுவராலயத்தின் பாதுகாப்பு வீடுகளில் தங்க வைக்கப்பட்டவர்கள் என்பதுடன், 588 பேர் இவ்வாறு நாட்டுக்கு வந்துள்ளனர்.

இதுதவிர சவுதியில் இருந்து 18 பேர், ஜோர்தானில் இருந்து 12 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 95,908 பேர் தொழிலுக்காக வௌிநாடு சென்றுள்ளதுடன், அதில் 56,526 பேர் ஆண் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண் தொழிலாளர்கள் அதிகமாக கட்டார் நாட்டிற்கு சென்றுள்ளதுடன், அவர்களின் மொத்த எண்ணிக்கை 16,626 ஆகும்.

2019 ஜூன் மாதம் வரையான காலத்தில் 39,382 பெண் தொழிலாளர்கள் வௌிநாடு சென்றுள்ளதுடன் அது மொத்த வௌிநாடு சென்றுள்ள தொழிலாயர்களில் 41 வீதம் ஆகும்.

இதேவேளை சவுதி நாட்டுக்கு தொழிலுக்காக சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,747 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 1 இலட்சம் பேர் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம், கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 1 இலட்சம் பேர் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம், Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.