119 அழைத்து பொய் தகவல் வழங்கிய நபர் கைது.

119 என்ற பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு 
ஏற்படுத்தி நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான திட்டமிடல்களை புறக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்குள் 8 நபர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தகவல் வழங்கியுள்ளார்.


அதனையடுத்து, உடனடியாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.


இதனையடுத்து, போலியான தகவலை வழங்கிய நபர், எல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் (53) அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன், குறித்த சந்தேக நபர், வீட்டின் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் அட்டையை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேக நபர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
119 அழைத்து பொய் தகவல் வழங்கிய நபர் கைது. 119 அழைத்து பொய் தகவல் வழங்கிய நபர் கைது. Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.