VIDEO : நாட்டுப் பற்று சம்பந்தமான பாடல் வெளியீடு.


எமது நாட்டில் இனங்களுக்கிடையே  நிலைநாட்டப்படவேண்டிய ஒற்றுமை , புரிந்துணர்வு , சகவாழ்வு முதலிய உயர் நோக்கங்களை
அடிப்படையாகக்கொண்டு தேசப்பற்று சம்பந்தமான பாடல்களைத் தயாரிக்கும் திட்டமொன்று அக்குறணை  யகீன் மொடல் ஸ்கூலின் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூலில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் பாடசாலையின் கன்னி முயற்சியாக ‘ லங்கா லங்கா பெம்பர லங்கா’ என்ற பாடல் அண்மையில் யகீன் ஈ-லேனிங் ஸ்டூடியோவினால் வெளியிடப்பட்டது.


நிஸ்வான் மொடல் ஸ்கூலின் 5ம் 6ம் மற்றும் 7ம் தர மாணவிகளால் பாடப்பட்டுள்ள இப்பாடல் நவீன தொழிநுட்பத்தினூடாக மேம்படுத்தப் பட்டுள்ளது.

‘ லங்கா லங்கா பெம்பர லங்கா’ என்ற இந்தப்பாடல் காலஞ்சென்ற பிரபல கலைஞரும் பாடகருமான சுனில் ஷாந்த அவர்களால் இயற்றப்பட்டுப் பாடப்பட்டது. எமது தாய் நாடு இலங்கையைப் பற்றி அழகிய முறையில் வர்ணிக்கும் இந்தப்பாடல் பிற்காலங்களில் காலஞ்சென்ற ஐவர் டெனிஸ் போன்ற பாடகர்களாலும் பாடப்பட்டது.


மாணாக்கரின் உள்ளங்களில் தம் தாய் நாட்டைப் பற்றிய பற்றுதலை அவர்களது சிறு வயதிலேயே உருவாக்குவது அவர்களது பெற்றோரதும் ஆசான்களதும் முக்கிய பொறுப்பாகும். இதன் மூலமாக நாட்டை நேசிக்கக்கூடிய, நாட்டின் புகழைப் பாரெங்கும் உயர்த்தக் கூடிய மேலும் தாய்நாட்டிற்கு எவ்வகையிலும் துரோகமிழைக்காத நற்பிரஜைகளை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் பஹ்மி பாரூக் எமது இணையத் தளத்திடம் தெரிவித்தார்.
VIDEO : நாட்டுப் பற்று சம்பந்தமான பாடல் வெளியீடு. VIDEO : நாட்டுப் பற்று சம்பந்தமான பாடல் வெளியீடு. Reviewed by Madawala News on June 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.