பன்முக ஆளுமைகள் ஒன்று சேர்ந்தால் நமது சமூகமே உயர்ந்து விளங்கும்.


அரசியலில் எதற்கு பதிலளிக்க வேன்டும், 
எதை கண்டு கொள்ளாமல் கடந்துவிட
வேண்டும்  என்பதை அறிந்து கொண்டாலே  போதும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். 

இதனைத்தான் . 
 ''குருடர்களாகவும், செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப் போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது என்று  மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர்   மர்ஹும்  அஷ்ரப் அவர்களும் கூறியிருந்தார். 


இக்கட்டான இந்த தருணத்தில் இதை எமக்கு கற்றுத் தந்திருக்கிறார் முஸ்லீம் காங்கிரசின் தற்போதைய தலைவர்  ரவூப்ஹக்கீம் எனலாம்.

சமகால இலங்கை அரசியலில் இவரது பேச்சுக்களும் அரசியல் செயற்பாடுகளும் எல்லோரையும் போல எனக்கும் பிடித்துப்போனது, 

இருந்த போதும் ஸ்ரீலங்கா  முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அதன் அரசியல் சார் கொள்கையில் முரண்படுபவன்  நான், 
ஆலமரமாய் ஆயிரம் விருதுகளுடன் வாழவேண்டிய எமது மரம், ஆளுக்கொரு மரமாக பிரிந்து சென்றதற்கு தலைவர்  ஹக்கீமும் ஒரு காரணம்,  மற்றையது மேடையில் சமூகத்தை பற்றி சிறப்பாக பேசிவிட்டு பாராளுமன்றத்தில்
முட்டாள்தனமாக செயற்படுவது, 

(இரண்டாவது எல்லோருக்கும் பொதுவானது) . 


“முஸ்லிம் இனத்தின் பெயரில் உங்களின் கட்சி உள்ளது, அப்படியாயின் கட்சியின் அரசியல் செயற்பாடுகளும் ஒரு இனத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்தே இது இனவாத அரசியல் இல்லையா” என ஒரு சிங்கள ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த தலைவர் ஹக்கீம் ,

'' எமது அபிவிருத்தி பணிகள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கும், சமூகத்தை  இலக்கு வைத்து அரசியல் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது கட்சியை ஸ்தாபித்த அன்றைய காலத் தருணங்களில் , அதையும் கடந்து செயல்பட்டுதான் தீர வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுமாயின் , அதற்கும் தயார் . நேர்மையான வழியில் அனைத்து ஜனநாயக கதவுகளையும் தட்ட வேண்டியது நம் கடமை மற்றும் உரிமை என்று  சிரித்துக்கொண்டே நிதானத்துடன்  பதிலளித்தார் 

ஆக்ரோஷமூட்டும் ஆவேசமான பதிலை எதிர்பார்த்து அதில்  குளிர்காய காத்திருந்த  ஊடகவியலாளருக்கு வழிந்தோடியது, 
இவ்வாறான சாமர்த்தியம் மிக்க தலைவர்களே எம் சமூகத்தின் இன்றைய தேவையும் கூட

மற்றைய எந்த தலைவராக இருந்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பதிலளித்து மற்றுமொரு ஏழரையை கூட்டியிருப்பார்கள். 



திறமை மாத்திரம் இருப்பதால் யாரும் இங்கு கொண்டாடப்படுவதில்லை மாறாக யாரை கொண்டாடவேண்டும் என்பதும் பேரினவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதை எம் சமூகம் உணர்வதற்கு இன்னும் பத்து வருடங்கள் செல்லலாம் . 


ஒரு சமூகத்தின் வளர்ச்சியை உற்றுநோக்குவதற்கு அதன் தலைவனை உற்று நோக்கினால் போதும் என்பார்கள். 
தனிநபர் ஒற்றுமை, குடும்ப ஒற்றுமையின் வெற்றிதான் சமுக ஒற்றுமையின் உருவாக்கமாகும்.

இஸ்லாத்தில் சமுக ஒற்றுமையானது அடிப்படை இலக்காகும். இது அனைத்து மனிதப் படைப்பையும் உள்ளடக்கியதாகக் காணப்படுறது. முஃமீன்களுக்கிடையில் மாத்திரமல்லாது ஏனைய மதத்தவர்ககுக்கு மத்தியிலும் இது காணப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.

சமூகத்திலும், பிரதேசத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாயின் அம் மாற்றங்களுக்காக சமூகத்திலுள்ள தலைவர்கள் புதிய சிந்தனைகளோடு ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. 

சமூக ஒற்றுமையின் இறுதி இலக்கு மனிதர்களுக்கிடையிலான சமாதானம், சமத்துவம் போன்ற பூரணமான பண்புகளை உருவாக்குவதோடு அவர்களுக்கிடையில் ஒரு நாகரிகமான சந்ததியை உருவாக்குவதுடன் கலாச்சார, பண்பாடு அறிவு பொருளாதார ரீதியான மேம்பாட்டுக்கும் வழிகோல்வதாகும்.

சமூக ஒற்றுமையின் வெளிப்பாடு எதிர்கால சந்ததிகளுடைய சுபீட்சமான வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையும். சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை உருவாக்கம் எதிர்கால சந்ததியினர்களுக்கு பொதுவான நற்செய்தியாக அமையும்.

இங்கு மாற வேண்டியது தலைவர்கள் மட்டுமல்ல நாங்களும் தான், கோவணம் தொங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் கட்சிக்கொடியை தூக்கிப்பிடிப்பதில் நியாயமில்லை. 



இளைஞர்களே;:. உங்களிடம் வினயமாக வேண்டிக்கொள்வது யாதெனில்..  
கொள்கை, வர்க்க  முரண்பாடுகளை கணக்கிலெடுக்காதே,  
கட்சி அரசியல் பேசுவதை நிறுத்துங்கள், வரம்பு மீறி யாரையும் புகழாதீர்கள், வீம்புக்காக யாரையும் கலாய்க்காதீர்கள்.  இந்த ஒற்றுமையில் எம் சமூகம் உயர்வடைய பாடுபடுங்கள்.எந்த இன தேசிய விடுதலை போராட்டமும் முழுமையாக சாத்தியமில்லை, சாதித்ததும் இல்லை, கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வோம். 

இனவாதிகளுக்கு தீனி போடாத இந்த சாணக்கியனை வைத்தே இருப்பவர்கள் அனைவரையும் ஒரே குடையின்  
கீழ் இணைத்துக்கொள்வோம்.


ஒவ்வொரு தலைமையிடமும்  வித்தியாசமான   ஆளுமைகள் இருக்கும், அத்தனையும் ஒன்று சேர்ந்தால் நமது சமூகமே உயர்ந்து விளங்கும். 



தலைவர்களே;: . இதுவரை இழந்தவை போதும் . சமூகத்தை பொறுப்புடன் வழிநடத்த வேண்டிய நாம் இன்னும்  ஓரத்தில் நின்றுகொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை , ஓரணியாய் ஒன்றுசேர்ந்து எம் உரிமைக்காய் குரல் கொடுங்கள் .

Feroz Mohamed 
Kattankudy
பன்முக ஆளுமைகள் ஒன்று சேர்ந்தால் நமது சமூகமே உயர்ந்து விளங்கும். பன்முக ஆளுமைகள்  ஒன்று சேர்ந்தால் நமது சமூகமே உயர்ந்து விளங்கும். Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.